spot_img
HomeCinema Reviewசாலா ; விமர்சனம்

சாலா ; விமர்சனம்

 

பார் வைத்து பிழைப்பு நடத்துபவனுக்கு அடியாளாக இருக்கும் நாயகன்.. பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்து கொண்டு பொது சேவையில் மதுபான கடைகளை மூடச்சொல்லும் நாயகி.. பல வருடங்களுக்கு முன்பு பார் ஏலம் எடுப்பதில் மோதல் ஏற்பட்டு கொலைகள் நடக்க ஆதலால் பார் மூடி அரசாங்கம் சீல் வைக்க அதைத் திறக்க அதை ஏலத்தில் எடுக்க போட்டி போடும் இரு கட்டப்பஞ்சாயத்து மனிதர்கள்.. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் காட்சிகளுமே சாலா படத்தின் கதைக்களம்.

நாயகன் ஆறடி உயரத்தில் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு முரட்டு சிங்கமாக வலம் வந்து அடிதடி என என அலப்பறை கொடுத்தாலும் பாடல் காட்சிகளிலும் பட்டய கிளப்புகிறார். இவரே தயாரிப்பாளர் என்பதால் இவரை முன்னிலைப்படுத்தி காட்சிகள் செல்கின்றன.

நாயகி பள்ளிக்கூடத்தில் டீச்சராக இருந்து கொண்டு ரூபாய் 15,000 சம்பளம் வாங்கி அதை ஏழை மாணவர்களுக்கு படிப்புக்காக செலவிட்டு வாழும் சமூக சேவகி. போராட்ட குணம் இவர் கதாபாத்திரத்தின் தன்மை போராட்டமே இவர் வாழ்க்கையின் அங்கம். அதனால் இவர் நடிப்பின் மற்றொரு பக்கம் நமக்கு தெரியவில்லை.

இயக்குனர் படத்தின் கதையை வடிவமைத்து திரைக்கதை அமைக்கும்போது மதுவுக்கு எதிரான கதை என்பதால் அதனால் ஏற்படும் தீமைகளை தெளிவாக சொல்லி குடி குடியை கெடுக்கும் என்ற வார்த்தையை உண்மையாக்குவது போல் படத்தின் இறுதிக் காட்சி அமைத்திருக்கிறார்.

இறுதிக்காட்சியில் மக்கள் கதற வேண்டும் என்பதற்காக பல குழந்தைகளையும் பல மனிதர்களையும் கர்ப்பிணி பெண்ணையும் அதன் சிசுவையும் விபத்துக்கு உள்ளாக்குவது போல் காட்சி வடிவமைத்து படம் பார்க்கும் நம்மை வெறுப்படையை செய்து இருக்கிறார்.

டாஸ்மாக் பார், ஏலம் என சில லாஜிக் இல்லாத காட்சிகள் ஏராளம். மக்களுக்கு நல்ல கருத்தை சொல்ல வரும்போது அதை நல்ல விதமாக சொல்ல வேண்டும். ஆனால் இயக்குனர் சொல்லிய விதம் படம் பார்த்த மக்களுக்கு புரியும்.

 

சாலா— சாராய வாடை

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img