spot_img
HomeCinema Reviewஅமரன் - விமர்சனம்

அமரன் – விமர்சனம்

 

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ், புவன் அரோரா நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அமரன்.

கதைக்களம் மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இவரின் ராணுவ பங்களிப்பில் வெற்றியும் இவரின் வீர மரணமும் மற்றும் இவரின் காதல் மனைவியின் கதையையும் அப்படியே படம் பிடித்து காட்டும் படம் அமரன்.

முகுந்தன் கதாபாத்திரத்தில் அப்படியே உயிரோட்டம் கொடுத்து தன் நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் சிவகார்த்திகேயன். காதலை வெளிப்படுத்துவதும் சரி, அந்தக் காதல் ஜெயிக்க காதலியின் தந்தை உத்தரவுக்காக போராடுவதிலும் சரி, நாட்டு மக்களின் நலனுக்காக காஷ்மீர் பார்டரில் ராணுவ வீரனாக அவரின் செயல்பாடுகளும் கேப்டனாக இருந்து கொண்டு தன் கீழ் வேலை செய்யும் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவதிலும் சரி, தன் மேலதிகாரி தனக்கு விருது பரிந்துரை செய்வதாக சொல்ல, எனக்கு வேண்டாம் விருதுக்கான விஷயத்தை வெற்றிகரமாக நடத்திய ராணுவ வீரர்களுக்கு பரிந்துரை செய்யுமாறு சொல்வதிலும் சரி, ஒரு ராணுவ அதிகாரியாக, காதல் மனைவியின் கணவனாக, குழந்தையின் தந்தையாக, தீவிரவாதிகளை களை எடுப்பதில் சிங்கமாக தன் உடன் பணியாற்றும் வீரர்களை காப்பாற்றுவதில் ஒரு மனிதனாக பல பரிமாணங்களில் சிவகார்த்திகேயன் அமரன் படம் மூலம் நடிகன் என்ற அந்தஸ்தை மீறி நாட்டுப் பற்று மிக்க ஒரு சிறந்த இந்தியன் என்பதை இந்த படத்தில் நிரூபித்து இருக்கிறார்.

ஒரு நகைச்சுவை மிகுந்த நாயகனாக நம்மால் அறியப்பட்ட சிவகார்த்திகேயன் இந்த அமரன் படம் மூலம் தன் நட்சத்திர அந்தஸ்தை இன்னும் ஒரு படி உயர்த்தி  விடுகிறார். ராணுவ வீரராக அவரின் கம்பீரம், அவரின் உடல் மொழி, வசன உச்சரிப்பு அப்படியே ஒரு ராணுவ வீரனை நாம் நேரில் பார்ப்பது போல் திரையில் தெரிகிறார். தந்தையை நைனா நைனா என்று அழைக்கும் போதெல்லாம் நம் பக்கத்து வீட்டு நண்பரை பார்ப்பது போல் இருக்கிறது. சிவ கார்த்திகேயனின் திரை பயணத்தில் இந்த அமரன் படம் ஒரு மாணிக்க கல்.

அவரின் மனைவியாக வரும் சாய் பல்லவி, இவரை பல படங்களில் பல கதாபாத்திரங்களில் நாம் பார்த்திருந்தாலும் இந்த அமரன் படத்தில் தேசிய விருதுக்கான நடிப்பை வழங்கியுள்ளார். மலையாளம் கலந்த வசன உச்சரிப்பில் அவரின் முகபாவம் எதார்த்தம். காதலை சொல்லும் போது அவரின் படபடப்பு கலந்த அந்த யதார்த்தம் நிச்சயம் அவர் ஒரு சிறந்த நடிகை என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அது மட்டுமல்ல சிவகார்த்திகேயன் தான் ராணுவத்தில் இறந்தால் கண்ணீர் வடிக்கக்கூடாது என்று சத்தியம் வாங்க அந்த சத்தியத்தை காப்பாற்ற அவரின் இறுதி  ஊர்வலத்தில் கண்ணீர் வடிக்காமல் அதற்காக முகத்தை உம்மென்று வைத்துக் கொள்ளாமல் கண்ணீர் வராமல் அடக்கி வைத்துக் கொள்ளாமல் அவர் காட்டும் முகபாவம் அவரால் மட்டுமே முடியும். இது ஒன்று போதும் அவர் தேசிய விருது வாங்க.

அம்மாவாக வரும் கீதா கைலாசம் தாயாக அவர் பங்களிப்பு சிறப்பு. தந்தையாக வருபவரும் மிக அருமை. மற்ற கதாபாத்திரங்கள் அவரவர் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர். இசை ஜிவி பிரகாஷ். இசை மழையை சாரலாக படம் முழுக்க தூவி இருக்கிறார். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தான் எடுத்த மேஜர் முகுந்தன் கதையை சிதையாமல் செம்மையாக சிறப்பாக திரைக்கதை அமைத்து சிறிது கூட சினிமாத்தனம் இல்லாமல் ஒரு சிறந்த படைப்பாக ரசிகனுக்கு வழங்கி இருக்கிறார். அவருக்கு நம் பாராட்டுக்கள் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் உடன் இணைந்து ஆர் மகேந்திரன் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரித்து  இருக்கின்றனர்.

அமரன் – இவன் ஒரு இந்தியன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img