spot_img
HomeCinema Reviewஜாலியோ ஜிம்கானா - விமர்சனம்

ஜாலியோ ஜிம்கானா – விமர்சனம்

 

பிரபுதேவா, ஒய்.ஜி மகேந்திரன், யோகி பாபு, மடோனா, அபிராமி மற்றும் பலர் நடிக்க சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ஜாலியோ ஜிம்கானா.

கதைக்களம் ஓட்டல் தொழில் நடத்தி வரும் ஒய்ஜி மகேந்திரன் குடும்பத்தினரிடம் அந்த ஊரின் எம்எல்ஏ தன் கட்சிக்காரர்களுக்கு ரூபாய் 2 லட்சத்துக்கு மேற்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி அவர்களை ஏமாற்றி விடுகிறார். இதனால் கோபத்தில் ஒய்ஜி மகேந்திரன் சாபம் விட எம்எல்ஏ ஆட்கள் ஒய்ஜி மகேந்திரனை தாக்க மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் செய்ய 25 லட்சம் தேவைப்படுகிறது.

அதற்கு என்ன செய்வது என்று குடும்பத்தாரும் அல்லல்பட அந்த சமயத்தில் பொதுநல வழக்கில் மக்களுக்காக வாதாடும் பிரபுதேவாவை சந்திக்க மகேந்திரன் குடும்பத்தினர் ஹோட்டலுக்கு செல்ல அங்கு பிரபு தேவா கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

அதன்பின் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவை எனற பெயரில் நம்மை இயக்குனர் நோகடித்து பார்க்கும் மக்களை சலிப்படைய வைத்து இருக்கிறார் இயக்குநர் சக்தி சிதம்பரம்.

ஏற்கனவே மகளிர் மட்டும் படத்தில் மறைந்த *நாகேஷ் *ஒரே ஒரு காட்சியில் பிணமாக வந்து மக்களின் வரவேற்பை பெற்று இன்று வரை நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் மிக அருமையாக தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருப்பார் அந்த ஒரு காட்சியை படம் முழுவதும் கிட்டத்தட்ட “90” நிமிடங்கள் நாயகன் பிரபுதேவா செய்து இருக்கிறார்.

ஒரு யானை (நாகேஷ் ) செய்யும் செயலை ஒரு சித்தெறும்பு (பிரபுதேவா) செய்ய முடியுமா? அது போல் தான் இருக்கிறது இந்த கதாபாத்திரம் பிரபு தேவா நடன புயலாக இருக்கலாம். ஆனால் நடிப்பு புயல் நாகேஷ் சார். புலியைப் பார்த்து பூனை சூடு போட்டது போல் ஆகிவிட்டது இந்த படம்.

ஒரு தாய் மூன்று பெண்கள் அப்படியே மகளிர் மட்டும் படத்தை ஞாபகப்படுத்துகிறது. அந்தப் படத்தில் ஊர்வசி பின்னி பெடலெடுத்து இருப்பார். அந்த கதாபாத்திரத்தை நடிகை அபிராமி இந்தப் படத்தில் செய்திருக்கிறார். இவர் ஒரு சிறந்த நடிகை தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் நகைச்சுவை என்பது சாதாரண விஷயம் அல்ல

டைமிங், வசன உச்சரிப்பு, முக பாவங்கள் என அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தான் நகைச்சுவை காட்சியில் சிறப்பாக செய்ய முடியும் ஆனால் இந்தப் படத்தில் அபிராமியின் நடிப்பு கொஞ்சம் அல்ல “மிக “ஓவர்.

திரைக்கதையை நகைச்சுவையாக வடிவமைத்தால் மட்டும் போதாது வசனங்களை நகைச்சுவையாக எழுத தெரிந்திருக்க வேண்டும் அந்த வசனத்தை பேச நகைச்சுவை தெரிந்த கலைஞர்கள் வேண்டும் இதுதான் ஒரு சிறந்த காமெடி படத்துக்கு தேவையானது.

ஆனால் இந்த படத்தில் அனைத்தும் தலைகீழாக உள்ளது. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் ஒரு சிறந்த நகைச்சுவை கலைஞர். அவரை சீரியசான கேரக்டரில் நடிக்க வைத்து சீரியஸான நடிகைகளை நகைச்சுவையில் நடிக்க வைத்தால் எப்படி?

இயக்குனர் சக்தி சிதம்பரம் ஒரு சிறந்த இயக்குனர் தான் அதில் நமக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. காலங்கள் மாறும்போது காலத்திற்கு ஏற்ற மாற்றங்களுக்கு நாம் மாற வேண்டும் இல்லை என்றால் எதுவும் சிறப்பு இல்லை

ஜா (கா )லியோ ஜிம்கானா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img