கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், இன்று 39 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு விருந்தாக, மிகப்பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தின் அசத்தலான கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ, யாஷின் ஸ்டைல் மற்றும் மாஸ் கலவையைப் பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்துகிறது.
பிறந்தநாள் பீக் வீடியோவில், யாஷ், மிருதுவான வெள்ளை நிற உடையில், ஃபெடோரா மற்றும் ஒரு சுருட்டைப் பிடித்தபடி, ஒரு கிளப்புக்குள் நுழைகிறார். கிளப்பின் கண்ணைக் கவரும் சூழல், ஆடம்பரம், மகிழ்ச்சி மற்றும் அதிரடி இசை மனதை மயக்குகிறது. யாஷின் ஸ்டைல் தோற்றம் மற்றும் மாஸ், அறையில் உள்ள ஒவ்வொரு பார்வையும் அவரை நோக்கி ஈர்க்கிறது. இந்த அதிரடி டீஸர், பார்வையாளர்கள் மனதை மயக்கி, வசீகரிக்கும் மற்றொரு உலகத்திற்குள் அழைத்துச் செல்கிறது, இது எல்லைகளைத் தாண்டிய ஒரு சினிமா அனுபவமாக உருவாகியுள்ளது.
யாஷ் மற்றும் டாக்ஸிக் படத்தின் உலகத்தை உருவாக்குவது குறித்துப் பேசிய இயக்குநர் கீது மோகன்தாஸ் கூறியதாவது –
“நீங்கள் யார் என்பதை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் நீங்களாக இருக்க முடியும்” – ரூமி.”
KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும், டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ், சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் குளோபல் ஃபிலிம்மேக்கிங் விருது உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்ற கீது மோகன்தாஸ், இம்முறை மிகப்பெரிய பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.