இந்த காலம் யூட்யூப் காலம். யூட்யூபில் பிரபலமாக இருக்கும் நபரை நாயகனாக்கி வெளிவந்திருக்கும் படம் ஹவுஸ் கீப்பிங். படத்தின் இயக்குனர் பி வாசுவின் உதவியாளர் என்றாலும் பி வாசுவின் சாயல் அடிக்காமல் மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார்.
காலேஜில் படிக்கும் நாயகன் வழக்கம்போல் நாயகியை காதலிக்க ஆனால் நாயகி காதலிக்க மறுக்க இறுதியாண்டில் நாயகியிடம் உன்னை விட பணக்காரனாக உன்னை விட அந்தஸ்து மிக்கவனாக வருவேன் என்று சவால் விடுகிறான் நாயகன்.
காலம் மாற்றங்கள் நாயகியின் வீட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு செல்கிறார் நாயகன். ஒரு கட்டத்தில் நாயகனின் சிறந்த குணத்தை பார்த்த நாயகி சிறந்த நண்பனாக ஏற்றுக் கொள்ள அதை காதல் என்று நினைத்த நாயகன் சந்தோஷத்தில் மிதக்க காதல் இல்லை நட்புதான் என்று நாயகி சொல்லும் போது ஏற்படும் பிரச்சனை என்ன என்பதே படத்தின் கதை
நாயகனாக நடித்திருக்கும் யூடியுப் பிரபலம் ஹரி பாஸ்கர், முதல் படம் போல் அல்லாமல் நேர்த்தியாக நடித்திருக்கிறார். அம்மாவின் பாசத்தில் மூழ்கி, அப்பாவின் அடியோடு வளர்ந்தாலும், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக வலம் வரும் இளைஞர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துபவர், தனது உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் இளைஞர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், அவரது செய்லபாடுகள் நாம் ஏற்கனவே பல படங்களில், பல நடிகர்களிடம் பார்த்துவிட்டதால், பத்தில் ஒன்றாகவே பார்வையாளர்களை கடக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, நடிப்பிலும், அழகிலும் பிரகாசிக்கிறார். அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக நடித்து பல இடங்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரயான், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
சாரா வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. இளவரசு, நாயகனின் அம்மாவாக நடித்த நடிகை, தங்கையாக நடித்தவர் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு.