அஜித், அர்ஜுன், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் வந்திருக்கும் படம் விடாமுயற்சி இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் வெளிவருவது ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமே. ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வந்திருக்கும் விடாமுயற்சியின் கதைக்களம் என்ன ?
காதலித்து திருமணம் புரிந்த மனைவி திரிஷாவிற்கு திருமண வாழ்க்கை கசந்து விடுகிறது. அதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்ய திரிஷாவை அவரின் தந்தை வீட்டில் விடுவதற்காக செல்லும் அஜித் வழியில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிட மனைவி திரிஷாவை ஒரு ட்ரக்கில் ஏற்றி பக்கத்தில் இருக்கும் ஒரு பாரில் காத்திருக்க சொல்லி அனுப்புகிறார் அஜித். அங்கு சென்று பார்த்தால் திரிஷா அங்கு இல்லை. திரிஷா எங்கே சென்றார் ? அஜித் அவரை கண்டுபிடித்தார் என்பதே மீதி கதை
வழக்கமாக நட்சத்திர அந்தஸ்து நாயகன் அஜித்துக்கு எப்போதும் ஓப்பனிங் சீன் ஒரு அமர்க்களமாக இருக்கும். ஆனால் இந்த விடாமுயற்சியில் அந்த அமர்க்களம் இல்லாமல் கார் டிக்கி ஓபன் செய்தால் அவர் முகம் தெரிகிறது. இதுவே அவரது ஓப்பனிங். ஒரு அல்டிமேட் நாயகனை மிக அசால்டாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர். ஆனால் அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிப்பது போல் மூன்று காலகட்டங்களில் அஜித்தின் கெட்டப் மிக அருமை.
அதுவும் திரிஷாவை காதலிக்கும் போது மிகவும் இளமையாக தலைமுடி கருமையாக பழைய அஜித் குமாரை மீண்டும் கண் முன் கொண்டு வருகிறார் பிறகு கல்யாணம் ஆகி ஒரு மூன்று வருடம் அதில் சிறிய தாடியுடன் இளநரை முடி பிறகு போஸ்டரில் இருக்கும் கெட்டப் மூன்றுக்கும் மிகப் பொருத்தமாக பொருந்தி இருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்.
மனைவி தனக்கு ஒரு இன்னொரு காதலன் இருப்பதை சொல்லும் போது வழக்கமான ஆண்களைப் போல் இல்லாமல் அதை ஒரு யதார்த்தமாக ஒரு நண்பனை போல் ஏற்றுக் கொள்கிறார். அது மட்டுமில்லாமல் வழக்கமான ஆற்றல் டயலாக் பஞ்ச் டயலாக் என்று எதுவும் இல்லாமல் ஒரு எதார்த்த கணவனாக ஒரு தனிப்பட்ட மனிதனாக தன் நடிப்பை சிறப்பாக வழங்கி இருக்கிறார் அல்டிமேட் ஸ்டார். மனைவிக்கு இன்னொருத்தர் மேல் காதல் இருந்தாலும் மனைவி மேல் தன் காதல் குறையவில்லை என்பதை பல இடங்களில் தன் முக பாவங்கள் மூலம் பிரதிபலிக்கிறார். அல்டிமேட் ஸ்டார் என்றுமே அல்டிமேட் ஸ்டார் தான்.
அடுத்து எதிர் நாயகன் அர்ஜுன். இவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. நாயகனாகவும் இவரை ரசித்திருக்கிறோம். எதிர் நாயகனாகவும் ரசித்திருக்கிறோம் அதுவும் அஜித்துக்கு எதிர் நாயகன் என்றால் கேட்கவா வேண்டும் ஆக்சன் கிங் ஆக்சிடென்ட் மட்டுமல்ல நடிப்பிலும் அசத்தல் ஆரோ படத்தின் இளம் நாயகன் ஆனால் அவரும் எதிர் நாயகன் பங்களிப்பு சிறப்பு அர்ஜுனுக்கு ஜோடியாக வரும் ரெஜினா ஒரு சைக்கோ கில்லர் ஆக வருகிறார் அவரும் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்
விடாமுயற்சி படத்தில் பாராட்டக் கூடியவர் ஒளிப்பதிவாளர் அஜர் பைஜான் நாட்டை மிக அழகாக தன் கேமராவுக்குள் படப்பிடித்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறார். இசை அனிருத். வழக்கமாக அஜித் படம் என்றால் மிகவும் சிரத்தை எடுத்து இசையமைக்கும் அனிருத் இந்தப் படத்தில் மெல்லிசை மென்மையாக தந்திருக்கிறார். இயக்குனர் மகிழ் திருமேனி தான் எழுதிய கதை திரைக்கதை வசனத்தில் எந்த ஒரு காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாமல் அப்படியே எடுத்துள்ளார்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால் ஒரு நட்சத்திர நாயகனை மக்கள் எப்படி எதிர்பார்ப்பார்கள் என்று தெரிந்தும் என் படத்தின் கதை இப்படித்தான், என் நாயகன் இப்படிதான், இப்படி தான் வரவேண்டும் என்று முடிவெடுத்து இயக்கியிருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் அஜித் இயக்குனரின் நாயகன் என்பதால் தன் ரசிகர்கள் தன்னிடம் இதை எதிர்பார்ப்பார்கள் என்று தெரிந்தும் இந்த கதையின் நாயகனாக வலம் வருகிறார்
விடாமுயற்சி ; முடிந்தால் வானமும் நம் வசப்படும்