spot_img
HomeCinema Review2k லவ் ஸ்டோரி - விமர்சனம்

2k லவ் ஸ்டோரி – விமர்சனம்

 

ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் பால சரவணன் மற்றும் பலர் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் 2கே லவ் ஸ்டோரி. இவங்க என்ன சொல்ல வராங்கன்னு நாம பாத்தா, சோசியல் மீடியாவுல பிரபலமா இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்காங்க. அதை காதல் என்று சொல்லி சில பேர் பரிகாசம் பண்ணுகிறார்கள்.

அதே சமயம் அந்த ஆண் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்ய முற்படும் நேரத்தில் எதிர்பாராத விபத்தில் அந்த பெண் மரணம் அடைய, சோகத்தில் நாயகன் இருக்க, அவன் தோழி அவனை மீண்டும் சோசியல் மீடியாவுக்கு அழைத்து வர முயற்சிக்கிறாள்.

இருவருக்கும் திருமணம் செய்யலாம் என்று பெற்றோர்கள் முடிவு செய்ய நாங்கள் எப்போதும் நண்பர்கள் தான் என்று நட்பை பாராட்டுகிறார்கள். இதனால் ஒரே குடும்பத்தில் இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்ய பின் நடப்பது என்ன ? இதுவே 2K லவ் ஸ்டோரியின் கதைக்களம்.

ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையேயான நட்பு குறித்து உரக்க பேசும் இந்த படத்தில் இயக்குநராக சுசீந்திரனின் பங்களிப்பு குறைவு தான். வழக்கமான கதை என்றாலும் காட்சிகளில் புதுமையோ,  சுவராசியமான திருப்பமோ இல்லையென்றாலும் ஒளிப்பதிவாளர்+ இசையமைப்பாளர் ஆகிய இருவரும் இணைந்து ரசிகர்களை காப்பாற்றுகிறார்கள்.

சுசீந்திரன் படத்தில் இடம்பெறும் வலிமையான உரையாடல்களும் மிஸ்ஸிங்.

பால சரவணன், அந்தோணி பாக்கியராஜ் , சிங்கம் புலி கூட்டணி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

அறிமுக நடிகர் ஜெகவீர் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றாலும் அவரது திரைத்தோற்றம் ரசிக்கும் வகையில் இருக்கிறது. பொருத்தமான கதையையும், திறமையான இயக்குநரையும் கவனமாக தெரிவு செய்தால்.. தமிழ் திரையுலகில் நிரந்தரமாக இடம் பிடிக்கலாம்.  ஏனைய நடிகர்கள், நடிகைகள் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்

முன்னணி நட்சத்திர இயக்குநரும்,  நடிகருமான சுசீந்திரன் வணிக ரீதியாக வெற்றி பெரும் படைப்பை வழங்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒரளவு அதில் வெற்றியும் பெறுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img