spot_img
HomeNewsவெளியீட்டு தேதியை உறுதி செய்த 'குபேரா' திரைப்படம்

வெளியீட்டு தேதியை உறுதி செய்த ‘குபேரா’ திரைப்படம்

உங்கள் நாட்காட்டிகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்!  தொலைநோக்கு பார்வை கொண்ட திரைப்படைப்பாளர் சேகர் கம்முலா இயக்கத்தில் வரும் ஜூன் 20,2025 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் ‘குபேரா’வின் மூலம் கதை சொல்லலை மாற்றியமைக்க உள்ளார்.

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரை உள்ளடக்கிய மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் முன்பு எப்பொழுதும் நடித்த கதாபாத்திரங்களைப் போலல்லாமல் புதுவிதமாக நடித்துள்ளதுடன், குபேரா இந்திய சினிமாவில் முத்திரை பதிக்கும் திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகிறது. தனது ஆழமான, குணச்சித்திர கதாபாத்திரங்கள் மூலம் நகரும் கதைகளுக்கு பெயர் பெற்ற சேகர் கம்முலா புதிய படைப்பு பிராந்தியத்திற்குள் நுழைந்து, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக குபேராவை மாற்றியுள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனில் நாரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் மேற்பார்வையில் குபேரா அதிகபட்ச பொருட்செலவில் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும்போது, அது ஒரு உண்மையான பான்-இந்தியா நிகழ்வாக இருக்கும்.

‘குபேரா’ காட்சிக்கு காட்சி அதன் அற்புதமான உள்ளடக்கத்தை வெளியிடும் வரை காத்திருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img