எஸ்.ஏ சந்திரசேகர், ஒய்,ஜி மகேந்திரன், பாலாஜி சக்திவேல், கவிதா பாரதி, சத்யன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கூரன், எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இந்திய சட்டங்களின் அவலங்களையும் சட்டம் ஒரு இருட்டறை என்பதையும் பல படங்களில் எஸ்ஏசி கூறி இருந்தாலும் இந்தக் கூரன் படத்தில் திரைக்கதை வசனத்தின் மூலம் சட்டம் என்பது சாதாரண மனிதனுக்கு சொந்தம் அல்ல, உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் சட்டம் பொதுவானது என்பதை நிரூபித்துக் காட்டும் படமே கூரன்,
படத்தின் கதைக்களம் என்ன ? பார்ப்போம்..
நாய் தன் குட்டியுடன் ரோட்டில் வரும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டி குட்டி நாய் மீது ஏற்றி கொன்று விடுகிறான். தன் குட்டி இறந்ததற்கு நியாயம் கேட்டு கோர்ட்டுக்கு போகும் தாய் நாயின் கதையே கூரன்.
கதை சொல்வதற்கு சுலபமாக இருந்தாலும் அதற்குத் திரைக்கதை வடிவமைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது திரைக்கதை வசனம் எழுதி நடித்து எஸ்.ஏ.சிக்கு மட்டுமே தெரியும். நாய் சொல்ல முயற்சிக்கும் விஷயத்தை யூகித்து அதன் பிரச்சனையை கண்டுபிடித்து அதன்பின் கோர்ட்டுக்கு சென்று கோர்ட்டின் கேள்விகளுக்கு நாயை பதில் சொல்ல வைத்து இப்படி பல பிரச்சனைகள் என்றாலும் தன் அனுபவத்தின் காரணத்தினால் எஸ்ஏசி திரைக்கதையில் அதை சுலபமாக கையாண்டிருக்கிறார்.
வக்கீலாக ஒரு வயது முதிர்ந்த மனிதர் என்றாலும் அவரின் உருவ அமைப்பு கோர்ட்டுக்குள் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. கோர்ட்டில் நாய் காரின் கலரை சொல்வதும் காரின் நம்பரை சொல்வதும் மிக அருமை. எப்படி ஒரு சாதாரண நாயினால் இதை சொல்ல முடியும் என்று கேள்வி வரும்போது நாய்க்கு ஒரு பிளாஷ் பேக்.. நாயகன் நாய் என்பதால் பிளாஷ்பேக் அருமை.. இறுதிக்காட்சியில் நாய் பணத்திற்காக டாஸ்மார்க் நடத்தும் அரசாங்கம் பல பிணங்கள் விழுவதை கண்டு கொள்வதில்லை என்று கூறும் வசனம்S எஸ்ஏசியின் அரசியல் சாட்டையடி.
நீதிபதியாக வரும் ஒய்.ஜிமகேந்திரன். இவரிடம் இருந்துதான் படத்தின் கதை துவங்குகிறது. 60 பிளஸ் ஆக, 50 பிளஸ் ஆக இரு வேறு பரிமாணங்கள் தான்.. ஒரு நகைச்சுவை நாயகன் என்பதால் முதல் காட்சியிலே மைக் செக் செய்யும்போது செக் செக் என்று கூற உடனே ஒய்ஜி எம் செக்கு தான் வாங்குவியா ? ஏன் பணம் வாங்கிக்க மாட்டியா என்ற நகைச்சுவையை பாணியை துவக்கி வைக்க அவரின் கதாபாத்திரம் அப்படித்தான் துவங்கும் என்று எதிர்பார்த்தால் கோர்ட்டில் நீதிபதியாக அமர்ந்து கேஸை அவர் நடத்தும் விதம் ஒரு சிறந்த குணச்சித்த நடிகரை இந்த தமிழ் சினிமா சரிவர பயன்படுத்தவில்லை என்பதே நமது ஆதங்கம்.
ஒரு நகைச்சுவை கலைஞனால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்ய முடியும் என்பது எடுத்துக்காட்டு திரு நாகேஷ். அதற்கு அடுத்து திரு ஒய்ஜி மகேந்திரன் என்றால் மிகையாகாது. அவரின் வசன மொழி மட்டுமல்ல, உடல் மொழியும் நீதிபதி கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்துகிறது. சினிமாவில் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கும் திரு ஒய் ஜி மகேந்திரனுக்கு பல வெற்றி படங்கள் வரிசையில் இந்தக் கூரன் படமும் அமையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.
எதிர் தரப்பு வக்கீலாக வரும் பாலாஜி சக்திவேல் தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். உடன் கவிதா பாரதியும் தன் பணியை திறம்பட செய்திருக்கிறார். தற்போதைய காலகட்டத்தில் பெரிய பெரிய படங்கள் பல நூறு கோடி படங்கள் தோல்விகளை தழுவிக் கொண்டிருந்தாலும் பல சிறு படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொண்டாடிக் கொண்டிருப்பதை தற்போதைய காலகட்டத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த வரிசையில் இந்த கூரன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெரும் என்பதில் நமக்கு சந்தேகம் இல்லை. மக்கள் தற்போது சிறந்த படங்களை தியேட்டருக்கு சென்று ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்த கூரன் படத்திற்கு வரும் மக்கள் தங்கள் குழந்தைகளோடு படத்தைப் பார்த்தால் சிறந்த படத்தை பார்த்த மாதிரி இருக்கும்.. குழந்தைகளுக்கான ஒரு பொழுதுபோக்கு சித்திரமாகவும் இருக்கும்..
கூரன் – இது ஒரு நாயின் சபதம்