spot_img
HomeNewsமீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள் 'மெஹந்தி சர்க்கஸ்' பட வெற்றிக் கூட்டணி

மீண்டும் ஒரு ஹிட் படத்துக்காக ஒன்றிணைகிறார்கள் ‘மெஹந்தி சர்க்கஸ்’ பட வெற்றிக் கூட்டணி

 

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் பெரும் எதிர்பார்ப்புகள் இல்லாமல் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மாயாஜாலம் செய்து விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி, திரைப்படத் துறையில் உள்ள பல இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘மெஹந்தி சர்க்கஸ்’. அதன் கதை, வசீகரமான காதல், நடிகர்களின் நடிப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான பணிகள் காரணமாக இன்றும் பலருக்குப் பிடித்த படமாக இருக்கிறது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான இயக்குநர் ராஜூ சரவணன் மற்றும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கூட்டணி இன்னொரு அழுத்தமான கதைக்காக மீண்டும் இணைந்துள்ளனர். கடந்த டிசம்பரில் தொடங்கிய படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படம் பாலக்கோடு , தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மலைப் பகுதிகளின் அழகான நிலப்பரப்புகளிலும் மற்றும் தர்மபுரியிலும் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர், ஆடியோ, டிரெய்லர் மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீட்டு தேதி பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img