ஜி.வி பிரகாஷ், சேத்தன், திவ்யபாரதி, அழகம்பெருமாள் மற்றும் பலர் நடிக்க வெளிவந்திருக்கும் படம் கிங்ஸ்டன்,
தூத்துக்குடி அருகே ஒரு மீனவ கிராமத்தில் ஒரு துஷ்ட ஆவி மக்களை பழிவாங்க அந்த ஆவியின் உடலை கடலில் புதைத்தால் ஊருக்கு நல்லது என்று நினைத்து கடலில் அடக்கம் செய்ய அதற்கு பிறகு அந்த கடலில் யார் மீன் பிடிக்க சென்றாலும் உயிரோடு திரும்புவதில்லை.
சில காலங்களுக்கு பிறகு கதையின் நாயகன் ஜிவி பிரகாஷ் அதன் உண்மை அறிய தன் நண்பர்களுடன் கடலுக்கு செல்ல அங்கு எதிர்பாராத திருப்பங்களும் பல அதிர்ச்சி அடையும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. பிறகு என்ன ? இதுவே கிங்ஸ்டன் படத்தின் கதை.
கிங் எனும் மீனவ இளைஞனாக நடித்திருக்கும் ஜீ.வி. பிரகாஷ் குமார்- அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற வகையில் தன் உடல் அமைப்பை மாற்றிக் கொள்ளாததால் பொருத்தமற்றவராக தோன்றுகிறார். வசன உச்சரிப்பிலும் வட்டார வழக்குகளை அதன் இயல்பில் உச்சரிக்கிறேன் என்ற பெயரில் பேசும் உரையாடல்களும் பொருத்தம் இல்லாததாகவே இருக்கிறது. நடிப்பு -தயாரிப்பு – என இரண்டு விடயங்களில் அசிரத்தையாக இருந்தாலும்.. பாடல்கள்- பின்னணி இசையில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறார் ஜீ.வி பிரகாஷ் குமார்.
கதையின் நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதியின் கதாபாத்திரம் வலிந்து திணிக்கப்பட்டிருப்பது போல் உள்ளது. அவரது திரை தோற்றமும் ரசிக்கும் படி இல்லை.
சேத்தன், அழகம்பெருமாள், குமரவேல் மூவரும் தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
கிரீன் மேட் படங்கள் என்றாலே கோகுல் பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார். நடிகராக சொதப்பி வந்தாலும் இசையமைப்பாளராக சாதித்து வந்த ஜி.வி.பிரகாஷ் குமார், தனது சொந்த படத்தின் இசையில் இப்படி சொதப்பியிருப்பது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கிறது.
தன் சொந்த நிறுவனத்தில் இந்த படத்தை தயாரித்த ஜிவி பிரகாஷ் மிகுந்த பொருட்ச அளவில் பல அரங்குகளை அமைத்து ஏராளமான CG வொர்க் உடன் நம்மை பிரமிக்க வைத்தாலும் படத்துக்கு உயிர் நாடி ஆன கதையில் உள்ள சில லாட்சிக்குகளை நிறைவு செய்திருக்கலாம் திரைக்கதையின் ஓட்டம் நம்மை சலிப்படைய செய்கிறது
மொத்தத்தில்
கிங்ஸ்டன் – பெயரில் மட்டும்