spot_img
HomeNewsரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் 

ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் 

 

சென்னை, இந்தியா – ( தேதி – 03.04.2025)
 சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக்கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது.இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் பான் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும்.
இரண்டு துடிப்பான திரைப்பட துறைகளின் இணைவு
தென் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ளன. தமிழ் பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்கள், கொரிய படைப்பாளிகளின் கதை சொல்லலுக்கு பாராட்டை தெரிவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த வளர்ந்து வரும் தொடர்பை உணர்ந்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபிளிக்ஸ் ஓவன் ஆகியவை பல்வேறு கலாச்சார சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்காக கரம் கோர்த்துள்ளன.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் திருமதி ஸ்ரீ‌நிதி சாகர் பேசுகையில், ” ஃபிளிக்ஸ் ஓவனுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த கூட்டாண்மை இரு தொழில் துறைகளுக்கும் பரஸ்பரம் பயனளிக்கும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட இந்திய மொழி திரைப்படங்களுக்கு எங்களுடைய முழு ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் தென் கொரியாவில் படபிடிப்பு நடத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தரும். கூடுதலாக கொரியன் கன்டென்டுகளை பல இந்திய மொழிகளில் மாற்றி அமைக்கும் உரிமையையும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இது படைப்பு ரீதியான பரிமாற்றங்களை கூடுதலாக வலுப்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ்…
*இந்திய பின்னணியிலான கொரிய திரைப்படங்களை ஃபிளிக்ஸ் ஓவன் தயாரிக்கும்.
*தென் கொரிய பின்னணியிலான இந்திய திரைப்படங்களை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும்.
தயாரிப்பினைக்கடந்து இந்திய மற்றும் கொரிய கலைஞர்களை கொண்ட திரைக்கதைகளை உருவாக்குவதையும், இணைய தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை இணைந்து தயாரிப்பதையும் இந்த கூட்டாண்மை நோக்கமாக கொண்டுள்ளது. இது இந்தோ – கொரிய கலாச்சார ஒத்துழைப்பை மேலும் வளர்க்கிறது. ” என்றார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான சாதனையுடன் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் – அதன் சர்வதேச அளவிலான தடத்தை விரைவாக விரிவுபடுத்துகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ‘போதை ஏறி புத்தி மாறி’, ‘அன்புள்ள கில்லி’, ‘நித்தம் ஒரு வானம்’ போன்ற வெற்றிகரமான படங்களையும் , சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ திரைப்படத்தையும், வெகுவாக பாராட்டப்பட்ட இணைய தொடர்களான பேப்பர் ராக்கெட் ( தமிழ்)  மற்றும் பாலு கனி டாக்கீஸ் (தெலுங்கு ) ஆகியவற்றையும் வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் விக்ரம் பிரபுவின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ‘லவ் மேரேஜ்: எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது. இத்துடன் சர்வதேச அளவிலான ப்ராஜெக்ட் ஒன்றிற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டுள்ளது.
இந்த ஒத்துழைப்பு , இந்திய மற்றும் கொரிய திரைப்பட தொழில்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை குறிக்கிறது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்கு புதிய மற்றும் ஈர்க்கக்கூடிய கதைகளை வழங்கும் ஒரு படைப்பு ரீதியிலான உற்சாகத்தை வளர்க்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img