புதுமுகங்களின் அணிவகுப்போடு நம் பார்த்த முகங்களும் சேர்ந்து நடிக்க வெளிவந்திருக்கும் படம் EMI. படத்தின் பெயரைக் கேட்டவுடன் கதை என்னவென்று புரிந்திருக்கும். சரியான வேலை வெட்டி இல்லாத கதாநாயகன் இஎம்ஐ மூலம் பல பொருட்களை வாங்க, அது அவரின் கல்யாணத்திற்கு பிறகு பூதாகரமாக வந்து நிற்க, அதிலிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை மீதி கதை.
நாயகனும் இயக்குனரும் ஒருவரே என்பதால் தனக்கு என்ன வரும், தனக்கு என்ன தெரியும் என்பதில் சிறப்பாக இருந்து நடிப்பிலும் இயக்கத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட கதை கரு சிறந்ததாக இருந்தாலும் திரைக்கதையில் வலுவான காட்சிகள் இல்லை. அவரின் காதல் காட்சிகள் இயல்பை மீறியதாக இருக்கிறது.
அவரின் நண்பர்களாக வரும் இருவரும் சினிமாத்தனத்தை மீறிய நண்பர்கள்.. எந்த ஒரு காட்சியிலும் ஒரு எதார்த்தமான நிகழ்வுகளும் வசனங்களும் இல்லை. அனைத்தும் நாடகத்தனமான காட்சிகள்.. நாயகனை தவிர மற்ற அனைவரும் நடிப்பில் வாங்கின சம்பளத்துக்கு அதிகமாக நடித்திருக்கிறார்கள்..
நடனம், பாடலில் நாயகன் சிறப்பாக நடனம் ஆடி இருக்கிறார். பரவாயில்லை அவர் இயக்கத்தை தவிர்த்து விட்டு ஒரு சிறந்த நடிகனாக வர முயற்சி செய்தால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்பது நமது கருத்து.
போக்கஸ் ஒன் டிவிக்காக
ஏ.கே உசேன்