spot_img
HomeNewsநடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் 'மைனே பியார் கியா'  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மந்தாகினி’ எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.
‘முரா’ எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் ‘மைனே பியார் கியா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஸ்டார்’ எனும் தமிழ் படத்திலும், ‘ஆசை கூடை’ எனும் சூப்பர் ஹிட்டான வீடியோ ஆல்பத்திலும் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ஜியோ பேபி, ஸ்ரீகாந்த் வெட்டியார், ரெடின் கிங்ஸ்லி, பாபின் பெரும்பில்லி, திரி கண்ணன், மைம் கோபி, குத்து சண்டை வீரர் தீனா, ஜனார்த்தனன் , ஜெகதீஷ்,  ஜிவி ரேக்ஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் பைசல், பில்கெஃப்சல் என்பருடன் இணைந்து எழுதி இருக்கிறார். இந்தத் திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில்  வெளியாகிறது.

டான் பால். பி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எலக்ட்ரானிக் கிளி இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கண்ணன் மோகன் கவனிக்க , கலை இயக்கத்தை சுனில் குமரன் மேற்கொண்டிருக்கிறார். எஸ்கியூடிவ் புரொடியூசராக பினு நாயர் – புரொடக்ஷன் கண்ட்ரோலராக சிஹாப் வெண்ணிலா ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img