spot_img
HomeCinema Reviewவல்லமை - விமர்சனம்

வல்லமை – விமர்சனம்

 

பிரேம்ஜி, குழந்தை நட்சத்திரம் திவ்யதர்ஷினி மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் வல்லமை. கதைக்களம் என்ன சொல்ல வருகிறது ?

பிரேம்ஜி மனைவி இழந்து தன் பெண் குழந்தைக்காக சென்னையில் பிழைப்பு தேடி வரும் ஒரு சராசரி மனிதன். சென்னையில் போஸ்டர் ஓட்டும் தொழிலை செய்து கொண்டு மகளைப் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அதே சமயம் மகளின் ஒரு பிரச்சனைக்காக டாக்டரிடம் செல்ல டாக்டர் உங்கள் மகளுக்கு தெரியாமல் உங்கள் மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர் என்று கூற அதிர்ச்சியில் உறைகிறார் பிரேம்ஜி.

என்ன செய்வது என்று புரியாமல் இருக்கும் பிரேம்ஜியிடம் அவரின் மகள் என்னை இப்படி செய்தவனை கண்டுபிடித்து கொலை செய்வோம் என்று சொல்ல பிரேம்ஜி அதற்கு ஒப்புக்கொள்கிறார். பாலியல் வன்கொடுமை செய்த அந்த நபரை பிரேம்ஜியும் அவர் மகளும் கண்டுபிடித்தார்களா? கொலை செய்தார்களா? என்பதை தெரிந்துகொள்ள பாருங்கள் ‘வல்லமை’.

‘பிரேம்ஜி என்றால் அவர் ஒரு காமெடி பீஸ் அப்படி என்று எண்ணத்தில் தான் அவர் படத்தை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் இந்த வல்லமை படத்தில் ஒரு பெண் குழந்தையின் தந்தையாக, மனைவியை இழந்த கணவனாக அவரின் நடிப்பு இதுவரை நாம் பார்த்திராத பிரேம்ஜியை இந்த படத்தில் நாம் பார்க்கலாம். இவரால் இப்படி நடிக்க முடியுமா என்று நாம் எண்ணும் அளவுக்கு நடிப்பை சிறப்பாக வழங்கியிருக்கிறார். பாராட்டுக்கள் பிரேம்ஜி.. அவரின் மகளாக வரும் திவ்யதர்ஷினி வயதுக்கு ஏற்ற நடிப்பு அதுவும் சிறப்பு..

எந்த ஒரு இடத்திலும் மிகைப்பட்ட நடிப்பை யாரும் செய்யவில்லை. கதாபாத்திரத்தின் தன்மை என்னவோ அந்த அளவிற்கு அவர்கள் நடிப்பும் இருந்தது. இயக்குனரை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும். எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் திரைக்கதையை மிகத்தெளிவாக சிறப்பாக வடிவமைத்து அழகாக இயக்கியிருக்கிறார். எந்த ஒரு இடத்திலும் விரசம் இல்லாமல் பாலியல் வன்கொடுமை என்றாலும் அதை இந்த அளவுக்கு விரசம் இல்லாமல் தர முடியும் என்றால் அது இந்த இயக்குனரால் மட்டுமே முடியும்.

காமக்கொடூரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் பிரேம்ஜியும் மகளும் தங்கள் புத்திசாலித்தனத்தால் மிகச் சிறப்பாக கண்டுபிடித்து அவனை பழிவாங்கும் விதம் ஒரு யதார்த்த மனிதனின் வாழ்வியலை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. வீரம் என்பது உடல் பலத்தால் வருவதல்ல மன பலத்தால் வருவது என்பதை ஒரு சாதாரண மனிதனாக பிரேம்ஜி இந்தப் படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் படத்தின் போக்கு அதை மறக்கடித்து விடுகிறது.

ஒரு சிறிய முதலீட்டில் ஒரு சிறந்த படம்-‘ வல்லமை

போக்கஸ் ஒன் சினிமாவுக்காக

A:K உசைன்

9841082481

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img