spot_img
HomeCinema Reviewஎன் காதலே ; விமர்சனம்

என் காதலே ; விமர்சனம்

 

Sky wanders எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பல் திருமதி ஜெயலட்சுமி தயாரித்து இயக்கிய என் காதலே என்ற திரைப்படத்தை துரைசாமி  வெளியிடுகிறார்…  லிங்கேஷ், லியா, திவ்யா, வெள்ளை ராஜன், கஞ்சா கருப்பு, மாறன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் என் காதலே.

கதைக்களம் என்ன சொல்ல வருகிறது ? பாண்டிச்சேரி மீனவ குப்பத்தில் இரு துருவங்களாக இரண்டு தாதாக்கள். கதையின் நாயகனின் தாய் மாமன் ஒரு பெரிய மனிதர். அவரின் பேச்சுக்கு எதிர் பேச்சு கிடையாது. அவரின் தங்கை மகன் தான் கதாநாயகன். அவரை காதலிக்கும் மாமனின் மகள். இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழும் தமிழ் கலாச்சாரமும் அறிந்து கொள்ள ஒரு ஆங்கிலப் பெண் பாண்டிச்சேரி வருகிறார். அவருக்கு உதவியாக நாயகனை நியமிக்கிறார் தாய்மாமன்.

கலாச்சாரம் கற்றுக்கொள்ள வந்த மேல்நாட்டு நாயகி நாயகனிடம் காதல் கற்றுக்கொள்கிறாள். தாய் மாமன் மகளோ தன்னை மணம் முடிக்க சொல்ல, நீ என் தாயைப் போன்றவள்.. உன்னை மனைவியாக என் மனது ஏற்கவில்லை என்று நாயகன் கூற, அதனால் தாய் மாமன் அந்த ஆங்கிலப் பெண்ணை ஊரை விட்டு விரட்ட, பிறகு என்ன நடக்கிறது என்பதை என் காதலே படத்தின் மீதி கதை.

நாயகன் பார்ப்பதற்கு அறிமுகம் இல்லாதவராக இருந்தாலும் தன் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து விடுகிறார். சண்டை காட்சிகளிலும் சரி, காதல் காட்சிகளிலும் சரி, சோகக் காட்சிகளிலும் சரி.. தன் பண்பட்ட நடிப்பால் பார்வையாளரை கவருகிறார். வழக்கம் போல் தமிழ் ஹீரோவுக்கு உண்டான அடையாளம் ஷேவ் பண்ணாத முகம், லுங்கி, கோடு போட்ட சட்டை என நம் தமிழ் கதாநாயகர்களுக்கு என்னென்ன தேவையோ அதை அறிந்து கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர்.

மாமன் மகளாக வரும் திவ்யா.. மாமனை காதலிக்கும் நாயகியாக மாமன் மட்டுமே உலகமாக வாழ்ந்து வரும் இவரின் நடிப்பு எதார்த்த கிராம பெண்களின் வரவு போல் உள்ளது. ஆங்கிலப் பெண் லியா. இவரின் அழகு பார்ப்பவரை கிறங்க வைக்கும் அழகு. அவரின் தமிழ் உச்சரிப்பு டப்பிங் பேசியவரின் அழகு. காதலிக்கும் போது அவரின் நாணம் தமிழ் நாயகிகள் அவரிடம் கடன் வாங்க வேண்டும். அந்த அளவுக்கு எதார்த்தமான முகபாவணைகள் இவர் தமிழ்நாட்டில் தொடர்ந்து இருந்தால் தமிழ் படங்களில் அதிகம் வர வாய்ப்புள்ளது. அழகும் நடிப்பும் சேர்ந்து இருப்பதால் இவரைப் பார்த்து நமது தமிழ் பட நாயகிகள் உஷாராக இருக்க வேண்டும்..

இயக்குனர் ஒரு பெண்மணி. பல பெண்மணிகள் முன்னணி இயக்குனராக நம் தமிழ் திரை உலகில் வலம் வந்தனர். அந்த வரிசையில் இந்த படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ஜெயலட்சுமி. காதல் கதையை கையில் எடுத்துக் கொண்டதால் அதில் விறுவிறுப்பு வேண்டும் என்று எதிர் எதிரே இரு தாதாக்களை முதல் காட்சியில் காட்டியிருந்தாலும், அதற்குப்பின் அதன்பின் காதலுக்குள் நுழைந்து விட்டார். எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் எந்த ஒரு தொய்வில்லாமல் திரைக்கதையை நகர்த்தி இறுதிக்காட்சியில் ரசிகனின் உள்ளத்தை கொள்ளை கொண்டு விட்டார்.

என் காதலே – பெண் மனது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img