திருப்பதி வெங்கடேசுவர சுவாமி கோவிலுக்குப் பிறகு திருப்பதி என்றால் சட்டென்று நினைவுக்கு வருவது ‘திருப்பதி பீமாஸ்’ தான். உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் என 1954 ஆம் ஆண்டு முதல், சுமார் 70 ஆண்டுகளை கடந்து இத்தொழிலில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் திருப்பதி பீமாஸ் தற்போது தமிழகத்தில் தனது முதல் கிளையை சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறந்துள்ளது.
இன்று (மே 11) நடைபெற்ற திருப்பதி பீமாஸ் சைவ உணவகத்தின் திறப்பு விழாவில், பிரபல திரைப்பட நடிகை தேவயானி மற்றும் இயக்குநரும், நடிகருமான தம்பி ராமையா சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்கள். இவர்களுடன் தொழில் முனைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய திருப்பதி பீமாஸ் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் அசோக், “70 ஆண்டுகளாக உணவகம் மற்றும் விடுதி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது 4 வது தலைமுறையில் நாங்கள் அடியெடுத்து வைக்கிறோம். ஒவ்வொரு தலைமுறையின் போதும், நவீன காலத்துக்கு ஏற்ப எங்களை புதுப்பித்துக் கொண்டதால் தான் இந்த தொழிலில் நாங்கள் வளர்ச்சியடைந்து வருகிறோம். முதன் முதலில் லாட்ஜ்களை திறந்ததும், ஓட்டல்களில் அட்டாச் பாத் அமைத்ததும் நாங்கள் தான். பிறகு, 2 ஸ்டார், 3 ஸ்டார் விடுதிகளை அமைத்ததும் நாங்கள் தான். இப்படி திருப்பதியில் தொடங்கி, காக்கிநாடா, பெங்களூர் ஆகிய பகுதிகளில் எங்கள் கிளைகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகத்தில் ‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகத்தின் முதல் கிளை சென்னை, அண்ணா சாலையில், ஸ்பென்சர்ஸ் பிளாசா மாலில் திறக்கப்பட்டுள்ளது. இந்த கிளையை தொடர்ந்து மேலும் 10 புதிய கிளைகளை சென்னையில் திறக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்தியா முழுவதும் திருப்பதி மீமாஸ் உணவகம் மற்றும் விடுதிகளை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.
திருப்பதி பீமாஸின் தனித்துவமான உணவு குறித்து கூறிய அசோக், “திருப்பதி பீமாஸ் உணவைப் பொறுத்தவரை முழுவதும் ஆந்திராவாகவும் இருக்காது, முழுவதும் தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகவும் இருக்காது. இரண்டுமே பாதி, பாதி என்ற ரீதியில் தான் இருக்கும். அதனால், ஆந்திர மக்களுக்கு எங்கள் உணவு பிடிக்கும், தமிழக மக்கள் எதிர்ப்பார்க்கும் சுவை, உணவு வகைகளும் எங்களிடம் கிடைப்பது, எங்களது தனித்துவம். மேலும், கடந்த 70 ஆண்டுகளாக எங்களது சிறப்பு வாய்ந்த உணவு என்றால் அது தாலி தான். சுமார் 14 வகையான உணவு வகைகள் கொண்ட தாலியில், ஆந்திராவைச் சார்ந்த 4 வகை உணவுகளும், தமிழகத்தைச் சார்ந்த 4 வகைகள் மற்றும் பிற மாநிலத்தின் வகைகள் இருப்பதோடு, அன்லிமிடெட் தாலி கொடுக்கிறோம். எனவே, எங்களது தாலி உணவு மக்களை அதிகமாக கவர்ந்த உணவாகும். மற்றபடி, சைனீஷ், நார்த் உள்ளிட்ட அனைத்து வகையான சைவ உணவுகள் இருக்கும். காலை உணவை பொறுத்தவரை, எங்களது பொங்கல் அந்த காலத்தில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதத்தின் சுவையில் இருக்கும். அதே போல், மற்ற உணவகங்களில் ஒரே ஒரு சாம்பார் மட்டும் தான் தருவார்கள், ஆனால் நாங்கள் டிபனுக்கு ஒரு சாம்பார், சாப்பாட்டுக்கு ஒரு சாம்பார் என்று இரண்டு வகையான சாம்பார் கொடுக்கிறோம். விலையை பொறுத்தவரை மிடில் கிளாஸ், அப்பர் மிடிள் கிளாஸ் மக்கள் சாப்பிடும் வகையில் நியாயமானதாக இருக்கும்.
சென்னையில் எங்களது புதிய கிளையை திறக்க பலர் எங்களிடம் கோரிக்கை விடுத்து வந்ததை தொடர்ந்து ஸ்பென்சர் பிளாசாவில் புதிய கிளையை திறந்தோம். ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பீமாஸில் சாப்பிட வருபவர்களுக்கு பார்க்கிங் கட்டணம் இல்லை, இலவசம் தான். அதே சமயம் சாப்பிட்டு விட்டு செல்லும் போது பார்க்கிங் கூப்பனில் எங்களது முத்திரையை பெற்று சென்றால் போதும்.” என்றார்.
நடிகை தேவயானி பேசுகையில், “பீமாஸ் உணவகம் 70 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்கது. தற்போது 4வது தலைமுறையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். இதுபோல் மேலும் பல தலைமுறைகளை கடந்து இவர்கள் பல சாதனைகள் படைக்க வேண்டும். இவர்களது உணவு அனைத்தும் சுவை மிக்கதாக இருக்கிறது. அதனால், சுவையான சைவ உணவு சாப்பிட வேண்டுமானால், ஸ்பென்சர்ஸ் பிளாசாவில் இருக்கும் திருப்பதி பீமாஸுக்கு வாங்க.
பொதுவாக சைவ உணவு என்பது நம்ம உடலுக்கு மிக ஆரோக்கியமானது. எளிதியில் ஜீரணம் ஆக கூடியதும் சைவ உணவு தான். அதிலும், திருப்பதி பீமாஸ் உணவகம் போன்ற தரமான உணவுகள் சுவையாக மட்டும் இன்றி உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கிறது. பீமாஸின் பருப்பு பொடி, நெய் மற்றும் கோங்ரா சட்னி சிறப்பானது என்று சொல்கிறார்கள். எனக்கு சாம்பார், ரசம் மிகவும் பிடிக்கும். இன்று சென்னையில் முதல் கிளையை திறந்திருக்கும் திருப்பதி பீமாஸ், மேலும் 10 கிளைகள் திறக்க இருக்கிறார்கள். பத்துக்கு மேலும் திறக்க வேண்டும், என்று நான் வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசுகையில், “திருப்பதி பீமாஸ் என்ற பெயரை நாம் நீண்ட நாட்களாகவே கேள்வி பட்டிருக்கிறோம், ஒரு நாளாவது இந்த விடுதியில் தங்க முடியுமா, என்றெல்லாம் யோசித்தது உண்டு. அப்படிப்பட்ட புகழ் பெற்ற திருப்பதி பீமாஸின் புதிய கிளை திறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி. திருப்பதியில் பிரபலமாக இருக்கும் திருப்பதி பீமாஸ், இப்போது என்னையில் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. எனவே, இனி சென்னையிலும் திருப்பதி பீமாஸ் பிரபலமடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில், நடிகை தேவயானி மற்றும் தம்பி ராமையாவுக்கு திருப்பதி பீமாஸ் உணவக நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து, சாமி சிலை ஒன்றை நினைவு பரிசாக வழங்கி சிறப்பித்தனர். நடிகை தேவயானி திருப்பதி பீமாஸ் உணவகத்தின் சில உணவு வகைகளை ருசித்து பார்த்ததோடு, “இந்த அளவுக்கு நான் சாப்பிட்டது இதுவே முதல் முறை, அந்த அளவுக்கு உணவு சுவையாக இருந்தது” என்று பாராட்டினார்.