spot_img
HomeNewsபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படம் பூஜையுடன் தொடங்கியது

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது

 

தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவது எளிதானது கிடையாது. அதற்கான சரியான திரைக்கதையும் அதை சரியாக படமாக்குவதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘LCU’ (Lokesh Cinematic Universe) என்ற புதிய சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். அதை சுற்றி சிறு செய்திகள் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த புதிய என்ட்ரிக்கான நேரம் இது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (MAY 12, 2025) சென்னையில் தொடங்கியது. நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர்.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்களும் நடிக்க உள்ளனர். இன்னும் மற்ற நடிகர்களைப் பற்றிய விவரங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விரைவில் வெளியாகும்.

‘ரெமோ’, ‘சுல்தான்’ படப்புகழ் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். கதை எழுதி இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். மியூசிக்கல் சென்சேஷன் சாய் அபயங்கர் படத்திற்கு இசையமைக்கிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமியின் தி ரூட் ஆகியவற்றுடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் வழங்குகிறார். நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல பகுதிகளிலும் 120 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட திட்டமிட்டுள்ளது. கௌதம் ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஜாக்கி இந்த படத்திற்கு கலை இயக்கம் செய்கிறார். அனல் அரசு சண்டைப் பயிற்சிகளை கவனிக்கிறார். இந்த மெகா பட்ஜெட் படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிரடி பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img