spot_img
HomeNewsஜூனியர் என்டிஆருக்கு பிறந்தநாள் பரிசாக  வார்-2' படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பு

ஜூனியர் என்டிஆருக்கு பிறந்தநாள் பரிசாக  வார்-2′ படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பு

ஒரு சிறிய ‘X’-தள பதிவின் மூலம் சமூக வலைத்தளங்களை பரபரபாக்கிய ‘பாலிவுட் சூப்பர் ஸ்டார்’ ஹ்ரிதிக் ரோஷன், ‘ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸின்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த திரைவரிசை படமான ‘வார்-2’-வில் முந்தைய பாகத்தில் வந்த ‘கபீர்’ என்ற கதாபாத்திரத்தையே ஏற்றுள்ளதுடன், தனது சமூக வலைத்தளங்களின் மூலம் மே 20,2025 அன்று இத்திரைப்படத்தின் அதிரிபுதிரியான புதிய அறிவிப்பை ஜூனியர் என். டி. ஆருக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்!

ஹ்ரிதிக் ரோஷன் தனது ‘X’-தள பதிவில்,”வணக்கம் @tarak9999 [ஜூனியர் என்.டி.ஆர்], இந்த ஆண்டு மே 20-ஆம் தேதி என்ன காத்திருக்கிறது, எதை எதிர்பார்க்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? என்னை நம்புங்கள், இது எதை பற்றியது என்று உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை? தயாராக இருக்கிறீர்களா?”

ஹ்ரிதிக்கின் பதிவு இணையத்தை உடனடியாக அதிர வைத்தது! அவர் ‘வார்-2’ படத்தின் புதிய அறிவிப்பை பற்றிய விவாதங்களை ஆரம்பித்து வைத்தார் – மேலும் ‘வார்’ திரைவரிசையின் இரண்டாவது பாகமான இத்திரைப்படம் மிகவும் கொண்டாடப்படும் இளம் இயக்குனரான அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

‘வார்-2’ திரைப்படம் ‘கபீரா’க ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் பான் இந்தியன் சூப்பர் ஸ்டாரான ஜூனியர் என். டி. ஆர். ஆகிய இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்ளை ஒன்றிணைக்கிறது. இந்த படம் ஆகஸ்ட் 14,2025 அன்று, தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ் இன்றைய சூழலில் இந்தியா சினிமாவின் முக்கிய அறிவுசார் சொத்தாக விளங்குகிறது,  தாங்கள் தயாரித்த படங்களில் ஏக் தா டைகர், டைகர் ஸிந்தா ஹை, வார், பதான், டைகர்-3 போன்ற வெற்றிப் படங்களையே ரசிகர்களுக்கு விருந்தாக அளித்துள்ளார்கள். ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஆறாவது திரைவரிசைப் படமாக ‘வார்-2’ வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img