படம் என்ன சொல்ல வருகிறது ? சினிமாவை விமர்சனம் செய்யும் விமர்சகர்களுக்கு சாட்டைடியாக வந்திருக்கிறது டிடி நெக்ஸ்ட் லெவல்.
சந்தானம் சினிமா விமர்சனம் செய்யும் ஒரு புகழ் பெற்றவர். அவர் விமர்சனம் செய்யும் படங்கள் வெற்றியும் பெற்று இருக்கின்றன. தோல்வியும் அடைந்திருக்கின்றன. இந்த நேரத்தில் அவர் குடும்பத்தாருக்கு ஒரு சிறப்புக் காட்சியை ஒரு சினிமா திரையரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு செல்லும் சந்தானம் மற்றும் குடும்பத்தினர் அங்கு திரையிடப்படும் திரைப்படத்தில் கதாபாத்திரங்களாக சினிமாவுக்குள் சென்று விடுகின்றனர். புரியாதவர்கள் படம் பார்த்து புரிந்து கொள்ளவும். அங்கு சென்றதும் சந்தானத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனை ஏற்படுகிறது. அதிலிருந்து தப்பித்தால் மட்டுமே சந்தானம் உயிரோட வர முடியும். அவர் எப்படி திரைப்படத்தின் காட்சிகளை மாற்றியமைத்து வெளி வருகிறார் என்பதை மீதிக்கதை.
சந்தானத்தை பலவிதமான நகைச்சுவை பாத்திரத்தில் நாம் பார்த்திருந்தாலும் கதாநாயகனாக பல கெட்டப்புகளை போட்டு இருந்தாலும் இந்தப் படத்தில் அவரின் கெட்டப் யூத் ஃபுல். அவரின் வசனங்களின் மாடுலேஷன் மிக அருமை. மற்ற படங்களின் சாயல் இந்த படத்தில் வராமல், தன் கதாபாத்திரத்தில் வராமல் மிக அருமையாக செய்திருக்கிறார் சந்தானம்.
உடன் மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா மாறன், கிங்ஸ்லி என காமெடி கூட்டணி களை கட்டினாலும் நம் இயக்குனர் கௌதம் மேனன் முதன்முறையாக நகைச்சுவை களத்தில் இறங்கி இருக்கிறார். அதுவும் அவர் இயக்கிய படத்திலிருந்து உயிரின் உயிரே பாடலில் இவருக்கும் கவர்ச்சி கன்னி யாஷிகாவுகேகும் ஒரு 40 செகண்ட் தியேட்டரில் கைதட்டல் பிளக்கிறது.
கஸ்தூரி இவர் சந்தானத்தின் அம்மாவாக இருந்தாலும் இந்தப் படத்தில் அதுவும் படத்திற்குள் கதாபாத்திரமாக மாறி தெலுங்கு பெண்ணாக அலப்பறை பண்ணுகிறார். உடன் நம் நிழல்கள் ரவி.. அவருக்கும் நகைச்சுவை புதிது என்றாலும் மிக அருமையாக செய்திருக்கிறார். நாயகி ஒரு பேபி டால் பொம்மை போல் வலம் வருகிறார்.
எடுத்துக்கொண்ட காமெடி களத்திற்கு ஒரு பெரிய கப்பலில் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவு. தயாரிப்பாளர் ஆர்யா என்பதால் செலவை பற்றி கவலைப்படாமல் இயக்குனர் தன் திரைக்கதையை மெருகேற்றி இருக்கிறார். செல்வராகவன் இவர் ஒரு இயக்குனர் பேய்.. இல்லை, பேய் இயக்குனர் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இவர் சொல்ல வரும் கருத்து விமர்சனம் என்பது சினிமாவைப் பற்றி நன்கு அறிந்து விமர்சனம் செய்தால் தப்பில்லை சினிமாவை பற்றி தெரியாதவர்கள் விமர்சனம் செய்தால் தவறு என்பது போல் சொல்லி இருக்கிறார்.
விமர்சனம் செய்ய ஒரு சினிமா எடுக்க அவசியமில்லை. பார்க்கும் திறன் இருந்தால் போதும். நான் ஒரு ஹோட்டலில் போய் சாப்பிட்டு பிரியாணியை குறை சொன்னால் அதற்காக உங்களுக்கு பிரியாணி செய்ய தெரியுமா என்று கேட்டால் நாம் என்ன சொல்வது ? அதுபோல் தான் இருக்கிறது இந்தப் படம். நகைச்சுவை என்ற பெயரில் ஒரு பேய் கதையை கதையாக சென்று அந்தக் கதைக்குள் ஒரு கதை என்று சாம்பார் சாதத்திற்கு பிரியாணியை மிக்ஸ் பண்ணியது போல் இருக்கிறது. மொத்தத்தில் படம் பிடித்திருந்தால் பார்க்கலாம்.. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம்..