சென்னை, மே 22, 2025: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ’ஹார்ட்பீட் சீசன் 2’, இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரசிகர்களின் விருப்பமான இந்தத் தொடரின் முதல் நான்கு எபிசோடுகள் இப்போது ஸ்ட்ரீமிங் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் புது எபிசோட் ஒளிபரப்பாகும். இதன் முதல் சீசன் பரபரப்பான திருப்பங்களுடன் முடிவடைந்த நிலையில், விடை தெரியாத கேள்விகளுக்கான விடையை தெரிந்து கொள்ள இரண்டாவது சீசனை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். இரண்டாவது சீசன் பல முக்கிய தருணங்கள், முரண்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதையைத் தரும்.
சீசன் 2 இல், பழைய பதட்டங்களைத் தாண்டி தற்போது சீனியராக பதவி உயர்வு பெற்ற ரீனா (தீபா பாலு) மற்றும் குணா (சர்வா) ஆகியோர் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆர்.கே. மருத்துவமனையின் தூணான டாக்டர் ரதி (அனுமோல்) தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் காப்பாற்றவும், தனது குழந்தைகளுடன் மீண்டும் இணைவதற்கும் தனது கடமைகளில் இருந்து ஒரு படி பின்வாங்குகிறார். இதற்கிடையில், ரீனா மற்றும் அர்ஜுன் (சாருகேஷ்) இடையேயான மோதல் அதிகமாகி தீர்வு காண முடியாத உணர்ச்சிகளும் அதிகம் பார்க்க முடிகிறது.
தற்போது ஒரு சிறிய மருத்துவமனையில் பணிபுரியும் தேஜு (யோகலட்சுமி) எதிர்பாராத விதமாக ரதியை சந்திக்கிறார். இந்த சீசனில் எதிராராத தருணங்களில் ஒன்று. இவர்களது சந்திப்பு அசௌகரியம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இதற்கிடையில், அனிதாவுக்கு (பதின்குமார்) ஒரு புதிய காதல் ஏற்படுகிறது. மேலும் புதிய பயிற்சியாளர்களான கமலா கண்ணன் (அப்துல்), கிரண் (சிவம்) மற்றும் நிலோஃபர் (அக்ஷதா) ஆகியோரின் அறிமுகம் ஆர்கே மருத்துவமனை உலகிற்கு புது எனர்ஜி கொடுக்கிறது. பிரீதம் (டிஎம் கார்த்திக்) புதிய தலைமை மருத்துவராக நுழைகிறார். அவரது கதாபாத்திரம் கதைக்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும்.
அதிக சவால்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் வெளிப்பட காத்திருக்கும் ரகசியங்களுடன், ‘ஹார்ட்பீட் சீசன் 1’ முடிவடைந்திருக்கிறது. சீசனின்1 அனைத்து கேள்விகளுக்கும் சீசன் 2-ல் பதில் காத்திருக்கிறது.
ஜியோஹாட்ஸ்டார் பற்றி:
ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. சிறப்பான கதைக்களங்கள், புதுமையான தொழில்நுட்பத்துடன் ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.