spot_img
HomeNewsகேரளா தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துள்ள நடிகை சம்ரிதி தாரா!

கேரளா தமிழ் சினிமாவுக்குக் கொடுத்துள்ள நடிகை சம்ரிதி தாரா!

 

தமிழ் சினிமா ரசிகர்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில், மொழிகளைக் கடந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை சம்ரிதி தாரா ஆர்வமாக உள்ளார். மே 23 அன்று உலகம் முழவதும் வெளியாக இருக்கும் ‘மையல்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சம்ரிதி தாரா. மலையாளத்தில் சமீபத்தில் வெளியான ‘பரனு பரனு பரனு செல்லன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இதுகுறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது, “தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது ‘மையல்’ படம் மூலம் நடந்திருப்பது மகிழ்ச்சி. இயக்குநர் A.P.G. ஏழுமலை கதை பற்றி சொன்னபோது என் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரத்தில் அறிமுகமாவது அரிய வாய்ப்பு. அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்தது இன்ஸ்பையரியங்கான விஷயம். வலுவான காதல், படபடப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களுடன் ‘மையல்’ பார்வையாளர்களை ஈர்க்கும். பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் படம் பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

மேலும் அவர் பகிர்ந்து கொண்டதாவது, “என் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக நடிக்க வந்திருக்கிறேன். இந்த பாசிட்டிவ் நம்பிக்கையை எனக்குள் விதைத்த என் பெற்றோர், கிரிக்கெட்டரான என் சகோதரருக்கு நன்றி. ‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படமாகவும் தமிழகத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி,
தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால்,
கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன்,
இயக்கம்: A.P.G. ஏழுமலை,
இசை: அமர்கீத்.எஸ்,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன்,
படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா மற்றும் அப்துல் நாசர்.
தொடர்பு:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img