spot_img
HomeNews'குபேரா' திரைப்படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் டீசர் வெளியானது

‘குபேரா’ திரைப்படத்தின் மயக்கும் விதமான ட்ரான்ஸ் எனப்படும் டீசர் வெளியானது

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட “ட்ரான்ஸ் ஆஃப் குபேரா” எனப்படும் சிறுமுன்னோட்டம் (Teaser) விரைவில் வெளியாகவிருக்கும் ‘குபேரா’ படக்குழு சார்பில் வெளியிடப்பட்டு, தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவின் தனித்தன்மையான சினிமா உலகத்திற்குள் கொண்டு சென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. திறமையான நடிகர்கள் பட்டாளமான தனுஷ், ‘கிங்’ நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலிப் தஹில் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த சிறுமுன்னோட்டம்(Teaser) சமூக வலைத்தளங்களை பரபரபாக்கி, ரசிகர்கள் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்களால் படம் திரைக்கு வருவதற்கு முன்பே நிச்சயம் வெற்றித் திரைப்படமாக இருக்கும் என்று தெரிவித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் சிறுமுன்னோட்டம் (Teaser) கதையின் சுவாரஸ்யமான குறிப்பை விவரிக்கிறது, கதையை பல்வேறு கட்டங்களுக்கு கொண்டு செல்வதுடன், சூழல் சார்ந்து நாடகத்தன்மை கலந்த கதைசொல்லல், தீவிரமான மற்றும் கண்களை கொள்ளை கொள்ளும் காட்சியமைப்புகள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. சேகர் கம்முலாவின் தனித்தன்மையான கதைசொல்லும் சிறப்பியல்பு திரையில் முழுவதுமாக வருவது, “டிரான்ஸ் ஆஃப் குபேரா” புதிரான மற்றும் வசீகரிக்கும் ஒரு உலகத்தை உருவாக்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தயாரிப்பாளர்கள்-ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், ஏசியன் சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் – ஆகியோர் இந்த சிறுமுன்னோட்டம் (Teaser) வெளியீட்டிற்கு முன்னதாக அற்புதமான படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகளுடன்  உத்வேகம் அதிகரிக்க வழிவகுத்தனர். இம்மாத தொடக்கத்தில், முதல் பாடலான “போயிவா நண்பா” ஆடியோ தளங்களின் தரவரிசைப் பட்டியலில் உடனடியாக இடம்பிடித்து வெற்றியைப் பெற்றது. இந்த பாடல் கனவுக்கூட்டணியான சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவிஸ்ரீபிரசாத் ஆகியோரது உருவாக்கத்தில், தனுஷின் துடிப்பான குரலுடன் விவேகாவின் ஈர்க்கும் விதமான வரிகள் மற்றும் டி. எஸ். பி. யின் அதிர்வை ஏற்படுத்தக் கூடிய இசையுடன் வெளியாகியுள்ளது. பாடலின் சிறுமுன்னோட்டம் (Teaser), சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, சமூக வலைத்தளங்களிலும் ஆடியோ தளங்களிலும் வரவேற்பை பெற்றதுடன் முழுப்பாடலுக்காக ரசிகர்களை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போதே, ‘குபேரா’ இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக விளங்குகிறது. ஒரு மதிப்புமிக்க இருமொழி தயாரிப்பான ‘குபேரா’ 20 ஜூன் 2025 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்கான கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img