Verus Productions தனது முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர்.
படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில், பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஹிந்தி சினிமாவில் ‘Stree’, ‘Helmet’, ‘Luka Chuppi’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்த இவர், இப்போது தென்னிந்திய சினிமாவில் கால்பதிக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளது.
இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் சிறப்பாக நடைபெற்று, படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.
நடிகை பவ்யா த்ரிகா, கௌதம் ராம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இப்படத்தை தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷெய்க் முஜீப் ஆகியோர் Verus Productions நிறுவனம் மூலம் தயாரிக்கின்றனர்.
இந்தப் படம், அறிவியல் கற்பனையும், உணர்ச்சியைப் பிணைந்து கலந்த ஒரு வித்தியாசமான கிரைம் த்ரில்லராக உருவாகிறது.
இயக்குநர் சூரியபிரதாப் எஸ் கூறியதாவது :
“‘ROOT’ எனும் இந்தக் கதை ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஒரு முக்கியமான கனவுப் பிராஜெக்ட். ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அமைந்த கிரைம் த்ரில்லரை, அறிவியல் பின்னணியுடன், உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்களோடு சேர்த்து உருவாக்கும் முயற்சி தான் இந்த படம்.
“கௌதம் ராம் கார்த்திக், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து காவல் அதிகாரியாக முழு ஈடுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அபார்ஷக்தி குரானா, தமிழில் தனது முதல் படத்திற்கே மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட நடிகராக உருவெடுக்கிறார். அவருக்கும் கௌதமிற்கும் இடையேயான காட்சிகள் முக்கிய இடத்தை பெறும் என்று நம்புகிறேன்.
Verus Productions தரப்பில் கூறப்பட்டதாவது :
“நாங்கள் தரமான, உணர்வுப்பூர்வமான படங்களை உருவாக்கும் நோக்கத்துடன் Verus Productions-ஐ தொடங்கினோம். ‘ROOT’ கதையை சூரியபிரதாப் கூறியதும், இதுவரை இருந்த எல்லைகளை தாண்டும் விதத்தில் மிகத் தெளிவாக இருந்தது. கௌதமின் திரை ஆற்றல், அபார்ஷக்தியின் புதிய முயற்சி மற்றும் இயக்குநரின் தெளிவான காட்சி திறமை — இவை அனைத்தும் சேர்ந்து, சினிமாத்துறையில் ஒரு தடம் பதிக்கும் என நம்புகிறோம்.”
தொழில்நுட்பக் குழு:
• ஒளிப்பதிவு: அர்ஜுன் ராஜா
• எடிட்டிங்: ஜான் அபிரகாம்
• இசை: வித்துஶனன்
• தயாரிப்பு வடிவமைப்பு: பவ்னா கோவர்தன்
• ஆக்ஷன்: மிரக்கிள் மைக்கேல்
• VFX: சாந்தகுமார் (Hocus Pocus Studios)
• ஆடை வடிவமைப்பு: தீப்தி ஆர்.ஜே
• தயாரிப்பு மேலாளர்: தனலிங்கம்
• தலைமை நிர்வாக அதிகாரி:
Dr. ஆலிஸ் ஏஞ்சல்
• PRO: ரேகா