ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 அன்று வெளியாகிறது.
படத்திற்கு இசையமைத்திருக்கும் சந்தோஷ் தயாநிதி பகிர்ந்து கொண்டதாவது, ”’பறந்து போ’ பட சமயத்தில் யுவன் சார் பிஸியாக இருந்ததால் எனக்கு அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் கிட்டத்தட்ட 19 பாடல்கள் இருக்கிறது. இதுமட்டுமல்லாது, படத்தின் பின்னணி இசையிலும் பல பாடல்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது இதுவே முதல்முறை. ராம் சார் வழக்கமாக கொடுக்கும் இசையை விரும்ப மாட்டார். புதிதாக, வித்தியாசமான இசையை எதிர்பார்ப்பார். ‘பறந்து போ’ கமர்ஷியல் படம் தான். அதில் ராம் சாரின் ஸ்டைலும் இருக்கும். வாய்ப்பு தந்த ராம் சாருக்கு நன்றி. ஒரு படத்தையும் இசையையும் எப்படி பார்க்க வேண்டும் என்பதை ராம் சாரிடம் கற்றுக் கொண்டேன். பாடலாசிரியர் மதன் கார்க்கி சாருக்கும் நன்றி” என்றார்.
நடிகர்கள்: சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: ராம்,
ஒளிப்பதிவு: என்.கே. ஏகாம்பரம்,
படத்தொகுப்பு: மதி வி.எஸ்.,
இசை: சந்தோஷ் தயாநிதி,
பாடல் வரிகள்: மதன் கார்க்கி,
தயாரிப்பு வடிவமைப்பு: குமார் கங்கப்பன்,
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா,
காஸ்ட்யூம்: சந்திரகாந்த் சோனாவனே,
நடன இயக்குநர்: ரிச்சி ரிச்சர்ட்சன்,
ஒலி வடிவமைப்பு: அருள் முருகன்,
ஆடியோகிராஃபர் : எம் ஆர் ராஜகிருஷ்ணன்,
கலரிஸ்ட்: ராஜசேகரன்,
விஎஃப்எக்ஸ் : கார்த்திக் கம்பேட்டன்,
ஸ்டில்ஸ் : ஜெய்குமார் வைரவன்,
ஒப்பனை : சசிகுமார் பரமசிவம், சுதி சுரேந்திரன்,
விளம்பர வடிவமைப்பு: ட்வென்டி.ஒன்.ஜி,
தயாரிப்பு: ஜியோ ஹாட்ஸ்டார், ஜிகேஎஸ் பிரதர்ஸ் புரொடக்ஷன், செவன் சீஸ் அண்ட் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ்,
தயாரிப்பாளர்கள் : ராம், வி குணசேகரன், வி கருப்புசாமி, வி ஷங்கர்,
உலகளாவிய வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் நாசர்