spot_img
HomeCinema Reviewபறந்து போ - விமர்சனம்

பறந்து போ – விமர்சனம்

 

சிவா, கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி மற்றும் பலர் நடிப்பில் வந்திருக்கும் படம் பறந்து போ. கணவன் மனைவி இருவரும் தங்கள் வேலைகளில் பிசியாக இருக்கும் போது, பெற்ற மகனை கவனிக்காமல் இருக்கும்போது, அவனின் தனிமையை போக்க ஒரு லாங் டிரைவ் போகும் தந்தை மகன் இருவருக்குள் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே ‘பறந்து போ’

இயக்குனர் ராமின் கைவண்ணத்தில் பல வருடங்களுக்குப் பிறகு வெளி வந்திருக்கும் படம். ராம் என்றால் எதிர்பார்ப்பு அதிகம். ரசிகனிடம் அந்த எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்து இருக்கிறார் இயக்குனர் ராம்.

ஒரு ஒன்பது வயது மகனின் மனது எப்படி இருக்கும், அதை புரிந்து எப்படி நடந்து கொள்வது என்பதை திரைக்கதையில் சம்பவங்களை சுவாரசியமாக்கி காட்சிக்குள்  நகைச்சுவையை பன்னீர் போல் தெளித்து மிக அருமையாக நம் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார் இயக்குநர் ராம்.

நாயகன் சிவா.. இவரை பல படங்களில், பல கதாபாத்திரங்களில் நாம் ரசித்து இருந்தாலும் இந்த படம் அவர் நடித்த படங்களை விட, இவரின் நாயகன்  அந்தஸ்த்தை உயர்த்தி இருக்கிறது. ஒரு யதார்த அப்பாவாக மனைவியிடம் காதலை பரிமாறும் கணவனாக புதிய பரிமாணத்தில் நடிப்பை சிறப்பித்திருக்கிறார் சிவா,

சிறுவயது நண்பி அஞ்சலியை பார்க்கும் காட்சி மிக சிறப்பு. அஞ்சலியின்  கணவரிடம் சிவா, சூர்யகாந்தி பூவை தன் மகனுக்காக பறிக்க சம்மதம் கேட்டு அந்த பூவை அஞ்சலி வாங்கும் காட்சி நட்பின் வெளிப்பாடு. மற்றும் கணவன்  மனைவியின் புரிதலை நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறது. அஞ்சலி சிறப்பு தோற்றம் என்றாலும் தன் பங்களிப்பை சிறப்பித்து இருக்கிறார்.

நாயகி கிரேஸ் ஆண்டனி. இடைவேளை வரை கணவன் மனைவி இருவரும் செல்போன் மூலம் தான் தாய்பாசம், கணவனின் அன்பு என அனைத்தையும் வசனத்தைவிட உடல்மொழியில் மற்றும் முகபாவங்களில் சிறப்பாக செய்து இருக்கிறார்.

மாஸ்டர் மிதுன் ரயன் இவன்தான் படத்தின் உண்மையான நாயகன். சிவாவிற்கே ஃடப் கொடுத்து இருக்கிறார். வீட்டில் உள்ளே வைத்து பூட்டி விட்டு செல்லும் அப்பாவையே வீட்டின் உள்ளே வைத்து பூட்டி தன் கஷ்டத்தை  உணர்த்தும் காட்சியில்  ஆரம்பித்து ஒவ்வெவொரு  காட்சியிலும்  நடிப்பில்  கொடிகட்டி பறக்க விடுகிறான். தமிழ்  சினிமாவில் இவனுக்கு  சிறந்த  எதிர்காலம் இருக்கிறது.

வசனத்தை படுக்கையாக்கி பாடல்களை போர்வையாக்கிருக்கிறார்கள். படத்தில் 15 பாடல்களுக்மேல் அனைத்தும் கதையின் போக்கில் செல்வதால் பனி சாரலை மயில் இறகால் வருடியது போல் இருக்கிறது.

பறந்து  போ – புல்லாங்குழல் இசையில்  உறவுகளின்  இன்னிசை

ரேட்டிங் – 4/5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img