spot_img
HomeNewsநமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் - உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

நமித் மல்ஹோத்ராவின் ராமாயணம் – உலகின் மிகப்பெரிய காவியத்தின் அறிமுகம்!

 

உலகெங்கிலும் உள்ள 2.5 பில்லியன் மக்களால் என்றென்றும் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ராமாயணம் போற்றப்படுகிறது. இந்த ராமாயணக் கதை மிகப்பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இந்தக் கதையில் ஹாலிவுட் மற்றும் இந்தியாவின் புகழ்பெற்ற திறமையாளர்கள் ஒன்றிணைகிறார்கள்.

இந்தக் கதையை நிதேஷ் திவாரி இயக்க, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் 8 முறை ஆஸ்கார் விருது பெற்ற VFX ஸ்டுடியோ DNEG, யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது. ராமாயணம் IMAX க்காக படமாக்கப்பட்டு முதல் பாகம் உலகம் முழுவதும் தீபாவளி 2026 மற்றும் இரண்டாம் பகுதி தீபாவளி 2027-லும் வெளியாகிறது.

ஜூலை 3, 2025: ‘ராமாயணம்: தி இன்ட்ரடக்ஷன்’ காவியத்தை உலகளவில் பிரம்மண்டமாக ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்துள்ளது. இந்தக் கதையின் மாபெரும் சக்திகளான ராமர் vs ராவணன் இடையேயான போர் அறிமுகமாக அமைந்துள்ளது. இந்த நிகழ்வு ஒன்பது இந்திய நகரங்களில் மற்றும் நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தின் பில் போர்டிலும் வெளியாகியுள்ளது. இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இணைந்து தயாரித்த ராமாயணம், ஆஸ்கார் விருது பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள், ஹாலிவுட்டின் சிறந்த படைப்பாளிகள், நடிப்பு மற்றும் கதை சொல்லலில் இந்தியாவின் திறமையாளர்களை இந்தக் கதையில் ஒன்றிணைக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் பிரம்மாண்டமான திரையனுபவத்தை ரசிகர்கள் பெற இருக்கிறார்கள்.

கதை:
காலமற்ற ஒரு யுகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தில் கடவுள்கள், முனிவர்கள், மனிதர்கள் மற்றும் அசுரர்களிடையே நல்லிணக்கத்தைப் பேணுகின்ற படைப்பவர் பிரம்மா, காப்பவர் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் ஆகிய மும்மூர்த்திகள் சம அந்தஸ்தில் இருக்கும்போது, திடீரென முன்பு எதிலும் இல்லாத அளவுக்கு சக்தி எழும்புகிறது.

ஒரு அசாத்தியமான குழந்தை, அனைவரும் அஞ்சும்படியான அழிக்க முடியாத ராஜாவான ராவணனாக மாறுகிறது. அவனது கர்ஜனை வானத்தை உலுக்கியது, அவனது நோக்கம் தெளிவாக உள்ளது! அது காக்கும் கடவுளான விஷ்ணுவை அழிப்பது. அவன் தன் இனத்திற்கு எதிராக நின்றதாக அவன் நம்புகிறான்.

அவனைத் தடுக்க, விஷ்ணு தனது பலவீனமான வடிவத்தில் பூமிக்கு வருகிறார். இளவரசன் ராமனாக!

ராமர் vs ராவணன், நல்லது vs கெட்டது, ஒளி vs இருள் என போர் தொடங்குகிறது. இதுவே ராமாயணம்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர்:

ராமனாக ரன்பீர் கபூர், ராவணனாக பான்-இந்திய சூப்பர் ஸ்டார் மற்றும் இணை தயாரிப்பாளரான யாஷ், அன்புக்குரிய சீதையாக சாய் பல்லவி, அனுமனாக இந்திய சினிமாவின் ஆக்‌ஷன் ஹீரோ சன்னி தியோல், ராமரின் விசுவாசமான சகோதரரான லட்சுமணனாக ரவி துபே மற்றும் பலர் நடிக்கின்றனர்.

முதல் முறையாக, ஆஸ்கார் விருது பெற்ற ஜாம்பவான்கள் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் ஒரு புதிய சினிமா சிம்பொனியை உருவாக்க இணைந்திருக்கிறார்கள்.

ஹாலிவுட்டின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர்கள் – டெர்ரி நோட்டரி (அவெஞ்சர்ஸ், பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்) மற்றும் கை நோரிஸ் (மேட் மேக்ஸ்: ஃப்யூரி ரோடு, ஃப்யூரியோசா) ஆகியோர் கடவுள்களுக்கும் பேய்களுக்கும் இடையிலான காவியப் போரை வடிவமைக்கிறார்கள். புகழ்பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர்களான ரவி பன்சால் (டூன் 2, அலாதீன்) மற்றும் ராம்சே அவேரி (கேப்டன் அமெரிக்கா, டுமாரோலேண்ட்) பிரம்மாண்ட சினிமா அனுபவத்தைக் கொடுக்க இருக்கிறார்கள்.

இயக்குநர், தயாரிப்பாளர் பிரைம் ஃபோகஸின் நிறுவனர் மற்றும் DNEG இன் தலைமை நிர்வாக அதிகாரி நமித் மல்ஹோத்ரா பகிர்ந்து கொண்டதாவது, “இது உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்குமான கலாச்சார பெருமை. ராமாயணத்தை நாங்கள் மீண்டும் சொல்வதன் மூலம் உலகிற்கும் நமது கலாச்சாரத்தையும் அறிமுகப்படுத்துகிறோம். திறமையாளர்களை ஒன்றிணைப்பது, எமோஷன், அதிநவீன கதை சொல்லலுடன் ரசிகர்கள் புதிய சினிமா அனுபவத்தைப் பெற இருக்கிறார்கள்”.

இயக்குநர் நிதேஷ் திவாரி, ” ராமாயணம் கதையை கேட்டுதான் நாம் வளர்ந்திருக்கிறோம். நமது கலாச்சாரத்தையும் தாங்கி வருகிறது. அதை பிரம்மாண்டமான சினிமா அனுபவத்தில் கொடுக்க இருக்கிறோம். இயக்குநராக இதைத் திரையில் கொண்டு வரும் கடமை எனக்கு இருக்கிறது. எல்லைகளைக் கடந்து பல பார்வையாளர்களையும் அடைய இருக்கிறோம்” என்றார்.

பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் பற்றி:

இயக்குநர், தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ராவால் நிறுவப்பட்டது பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ். உலகளாவிய பார்வையாளர்களுக்காக திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கேமிங் என தரமான உள்ளடக்கத்துடன் கதைகளைக் கொடுத்து வருகிறது. ஒலி மேடைகள், தயாரிப்பு வசதிகள், காட்சி விளைவுகள், அனிமேஷன் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது DNEG குழுமம். பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் புது திறமையாளர்களுக்கான திறவுகோலாக இருக்கிறது. ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தை KVN புரொடக்‌ஷனுடன் இணைந்தும், ‘ராமாயணா’ திரைப்படத்தை பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img