z5ல் இன்று முதல் ஒளிபரப்பாகும் சட்டமும் நீதியும் வலைத்தொடர் என்ன சொல்ல வருகிறது
கோர்ட் வாசலில் நோட்டரி பப்ளிக் கையெழுத்து போட்டு வரும் ஒரு வழக்கறிஞர் முன்பாக தன் மகளை கண்டுபிடித்து தராத காவல் நிலையத்தை கண்டித்து கோர்ட் வாசலில் ஒரு முதியவர் தீக்குளித்து இறக்கிறார்
இது ஒரு புறம் இருக்க அவரிடம் ஜூனியராக சேர வேண்டும் என்று நாயகி அவர் பின்னே அலைய வக்கீலின் மகன் சட்டம் படிக்க சொன்னால் முடியாது என்று கூறி வேறுபட்ட படிப்பை தொடர முயற்சிக்க தான் சட்டப் படிப்பு படிக்க வேண்டும் என்றால் ஒரு கேஸிலாவது நீ ஜெயிக்க வேண்டும் என்று தந்தையிடம் மகன் கூற அதை சவாலாக எடுத்துக் கொண்ட நாயகன் கோர்ட் வாசலில் தீக்குளித்த பெரியவரின் வழக்கை பொதுநல வழக்காக தொடர அதன் பின் கிளம்புகிறது பூதங்கள் ?
யார் அந்த பெரியவர்?
காணாமல் போன பெண் யார்?
எதற்காக காணாமல் போனார்.?
கடத்தப்பட்டாரா ??
அல்லது கொலை செய்யப்பட்டாரா?
இந்த கேசை எடுக்கக் கூடாது என்று மிரட்டும் அந்த நபர் யார் ?
இதற்கு விடை தெரிந்து கொள்ள பாருங்கள் சட்டமும் நீதியும் உங்கள் Z5 ல்
Z5 தரமான வலுவான கதை அம்சங்களை கொண்ட வலைத் தொடர்களை தருகிறது
விலங்கு
அயலி
என பல வெற்றி தொடர்களை நமக்குத் தந்த Z5 அந்த வரிசையில் நமக்குத் தந்திருக்கிறது சட்டமும் நீதியும்
தொடரின் ஆரம்பத்திலேயே பரபரப்பும் விறுவிறுப்பும் ஆரம்பித்து விடுகிறது முதியவர் கோர்ட் வாசலில் தீக்குளிக்க அதை ஒரு வழக்காக கூட பதிவு செய்யாமல் இருக்கும் காவல்துறை சட்ட ஞானமும் சட்ட விதிகளும் நன்கு அறிந்த நாயகன் ஏன் நீதிமன்றத்தில் வழக்காடாமல் இருக்கிறார் என்பது பின்வரும் பகுதிகளில் தெரிகிறது தன் இயலாமை இயலாது என்று மனதில் ஒரு குறையை வைத்துக்கொண்டு நம்ம சித்தப்பு சரவணன் அந்தக் கதாபாத்திரத்தின் நாயகனாக வாழ்கிறார்
வாழ்ந்து கொண்டே இருக்கிறார் முக பாவங்கள் முதல் வசன உச்சரிப்பு உடல் மொழி என அந்த கதாபாத்திரத்தில் தன்னை நுழைத்துக் கொண்டு மிக அருமையாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார்
ஒரு மிகப்பெரிய அரசாங்க வக்கீலை எதிர்கொள்ளும் நேரத்தில் கூட தன்னிடம் ஒரு இயலாமை இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் வழக்காடும் விதம் மிக அருமை நம் சித்தப்பு சரவணனை நம் தமிழ் சினிமா இயக்குனர்கள் சரிவர பயன்படுத்தி வில்லை என்பது இத்தொடரை பார்க்கும்போது நமக்கு தெரிகிறது
இத்தொடரின் வெற்றிக்குப் பிறகு சரவணன் தமிழ் திரை உலகில் ஒரு ரவுண்டு,, “வருவது உறுதி
நாயகி நமிர்தா ஜூனியர் வழக்கறிஞராக அவரின் தேடல் அவரின் ஆராய்ச்சி அவரின் முயற்சி இளமை புதுமை இனிமை என மிக அழகாகவும் மிக துடிக்காகவும் அதே சமயம் சீனியர் சொல் படியும் ஜூனியர் ஆகவும் தன் கதாபாத்திரத்தை செம்மையாக் இருக்கிறார் மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரம் அறிந்து இத்தொடருக்கு வலுசேர்த்திருக்கின்றனர் இயக்குனர் திரைக்கதையில் எந்த ஒரு தூய்வும் ஏற்படாமல் ஏழு பாகங்களையும் மிகவும் எதிர்பார்ப்புடன் அதே சமயம் ஒரு திக் திக் உடன் நம்மை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார் ஆரம்பம் முதல் முடிவு வரை இயக்குனரின் உழைப்பு தொடரில் நம் கண் முன்னே தெரிகிறது இசை கதைக்கேற்ற பின்னணி இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் விபின் பாஸ்கர் வாழ்த்துக்கள் ஒளிப்பதிது கோகுல கிருஷ்ணன் கோர்ட் அதன் வாசல் இதை எந்த அளவுக்கு அழகு படுத்தி சிறப்பாக்க முடியுமோ அந்த அளவுக்கு சிறப்பாக்கி இருக்கிறார்
கதை ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக சென்றாலும் கிளைமாக்ஸ்சில் ஏதோ குறைவது போல் நமக்குத் தெரிகிறது நாம் எதிர்பார்த்ததை அவர்கள் தரவில்லையா அல்லது அவர்கள் தந்ததை நாம் எதிர்பார்க்கவில்லையா என்று நமக்குத் தெரியவில்லை
மிஸ்ஸிங், கடத்தல், விபச்சாரம், கொலை முயற்சி, இதில் ஏதோ ஒன்று நம் மனதை நிறுடுகிறது அது என்ன என்று உங்களுக்கு புரிந்தால் எனக்கு கூறுங்கள்
ரேட்டிங்:3/5
போக்கஸ் ஒன் சினிமாவுக்காக
ஏ கே உசைன்