spot_img
HomeNews'பெத்தி'( Peddi)  படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட ராம் சரண் உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

‘பெத்தி'( Peddi)  படத்திற்காக மாற்றியமைத்து கொண்ட ராம் சரண் உடலமைப்பு தோற்ற புகைப்படம் வெளியீடு

”குளோபல் ஸ்டார்’ ராம்சரண் நடித்து வரும் ‘பெத்தி’ ( Peddi) படத்திற்காக நாளை முதல் தொடங்கும் நீண்ட நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நம்ப முடியாத வகையில் அவரது தோற்றமும், ஒப்பனையும் மாற்றி அமைத்துக் கொண்டு தோன்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘குளோபல் ஸ்டார் ‘ராம்சரண் தற்போது நடித்து வரும் இலட்சிய படமான ‘பெத்தி’ ( Peddi) திரைப்படத்திற்காக ஒப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். புஜ்ஜி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த திரைப்படம்-  இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படத்தின் வீடியோ கிளிம்ப்ஸ் நாடு முழுவதும் அனைத்து மொழிகளிலும் பெரும் உற்சாகத்தை தூண்டியுள்ளது.

இப்படத்தின் முக்கியமான மற்றும் நீண்ட நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. இதற்கு முன்னதாக- இந்த கதாபாத்திரத்திற்காக வடிவமைக்கப்பட்ட சக்தி வாய்ந்த புதிய அவதாரத்தை வெளிப்படுத்த ராம் சரண் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தன்னை தயார்படுத்தி வருகிறார். அதற்காக அவர் இடைவிடாத பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.  அவரது கதாபாத்திரம் கோரும் ஆற்றலையும், தீவிரத் தன்மையையும் முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் தன் உடலை செதுக்கி இருக்கிறார். இதற்காக அவர் ஜிம்மில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கரடு முரடான தாடி – இறுக்கமாக இழுத்துக் கட்டப்பட்ட கூந்தல்-  ஒழுக்கமும், மன உறுதியும் கொண்ட கம்பீரமான உடல் அமைப்பை கொண்டுள்ளார் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மாற்றம் சாதாரண தோற்றத்தை பற்றியது மட்டுமல்ல.. அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மற்றும் கதையின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்குச் சிறந்த சான்றாகும். இந்தத் தோற்றத்தில் அவர் உண்மையிலேயே ஒரு கிரேக்க கடவுளைப் போல் இருக்கிறார்.  வலுவான மற்றும் ஆக்ரோஷமான மனநிலைக்கு முழுமையாக மாறிவிட்டார் என்பதையும் பிரதிபலிக்கிறது.

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 ஆம் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள ‘பெத்தி’ ( Peddi)  திரைப்படம் ராம்சரணின் திரையுலக பயணத்தில் இலட்சிய படங்களில் ஒன்று என்ற உற்சாகத்தை உருவாக்கி வருகிறது. அவரது தீவிரமான தோற்றம்.. தற்போது முழு வீச்சில் இருப்பதால் நடிகரின் நம்ப முடியாத மாற்றத்தை போலவே அவரிடமிருந்து சக்தி வாய்ந்த நடிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

‘ கருநாடக சக்கரவர்த்தி’ சிவராஜ் குமாரின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் அவரது பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜெகபதி பாபு மற்றும் திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கியமான துணை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற மேஸ்ட்ரோ ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27 2026 அன்று இப்படத்தின் வெளியீட்டு தேதி என்பதால்.. படக் குழு அதை நோக்கி விறுவிறுப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது.. ‘பெத்தி ‘ ( Peddi) படத்தைப் பற்றிய உற்சாகம் அதிகரிக்கிறது.‌

நடிகர்கள் :

‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதிபாபு , திவ்யேந்து சர்மா.தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : புச்சி பாபு சனா
வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ் & சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பு நிறுவனம்:  விருத்தி சினிமாஸ்
தயாரிப்பாளர் : வெங்கட சதீஷ் கிலாரு
இசை : ஏ. ஆர் . ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஆர். ரத்னவேலு
தயாரிப்பு வடிவமைப்பு : அவிநாசி கொல்லா
படத்தொகுப்பு : நவின் நூலி
நிர்வாக தயாரிப்பு : வி. ஒய். பிரவீண் குமார்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு : யுவராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img