இஸ்லாமிய மன்னர்கள் கெட்டவர்கள், இந்துக்கள் நல்லவர்கள் என்ற பாஜகவின் பாசிச அரசியலை உணர்த்தும் படமாக வந்திருக்கிறது ஹரிஹர வீரமல்லு.
முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் ஆட்சியில் இந்துக்கள் அனுபவித்த துன்பங்களை, அவர்களுக்காக எழும் ஹரிஹர வீரமல்லு என்ற கற்பனை வீரனின் கதையோடு இணைத்து, இயக்குநர் ஏ.எம்.ஜோதி கிருஷ்ணா பிரமாண்டமான பொழுதுபோக்கு படமாக வடிவமைத்துள்ளார்..
நடிப்பு:
பவன் கல்யாண், மாஸான தோற்றத்துடன் ரசிகர்களை திருப்தி செய்கிறார். பாபி தியோல், கொடுங்கோல் முகலாய மன்னராக தாக்கம் ஏற்படுத்துகிறார். மற்ற நடிகர்கள் (சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர்) சிறப்பாக பங்களிக்கிறார்கள்.
நாயகி நிதி அகர்வால் பெரிதாக செய்யவேண்டிய வேலை இல்லாமல் அழகிய தோற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பம்:
கீரவாணியின் இசை (பாடல்கள் + BGM) படத்திற்கு மிகப்பெரிய பலம்.
ஒளிப்பதிவாளர்கள் ஞானசேகர் மற்றும் மனோஜ் பரமஹம்சா காட்சிகளை பிரமாண்டமாக காட்டியுள்ளனர்.
கிராபிக்ஸ் குறைபாடு இருந்தாலும் தொழில்நுட்பக் குழுவின் பணி அதை மறைக்கிறது.
குறைகள்:
வரலாற்றை மத அரசியலுடன் கலந்து சற்று செயற்கையான விளக்கம்.
சில இடங்களில் கதை மெதுவாக நகர்கிறது.
அவுரங்கசீப்பின் வரலாற்றை இயக்குனர் சரியாக படிக்க வேண்டும். அவர் மதவாதி தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கொடூர வில்லனும் மனித நேயமும் இல்லாதவர் இல்லை. அவர் இஸ்லாம் மதத்தை நேசித்தார். அவற்றின் போதனைகளை ஏற்றுக் கொண்டார். அதை சரிவர ஏற்காத தன் தந்தை ஷாஜகானை சிறையில் அடைத்தார். அதுமட்டுமல்ல, தன் உணவுக்கான பணத்தை தொப்பி தேய்த்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தன் வாழ்க்கையை நடத்தினார் என்பது வரலாறு. அவரை ஒரு கொடுங்கோல் அரசன் போல் காட்டி இருக்கும் இயக்குனரை வன்மையாக கண்டிக்கிறோம்.
மொத்தத்தில்:
பவன் கல்யாணின் மாஸ் தோற்றம், கீரவாணி இசை, பிரமாண்ட காட்சிகள் ஆகியவற்றால் ரசிகர்களுக்கு ஒரு “பெரிய திரைப் பண்டிகை”. ஆனால் வரலாறு & மத அரசியலின் விளக்கம் அனைவருக்கும் பொருந்தாது..