திருடனான பகத் பாசிலும், மர்மமான வயதான வடிவேலுவும் ஒன்றாகச் செல்லும் பயணத்தில் புதிர்கள், திருப்பங்கள் நிறைந்த சுவாரஸ்யம் காத்திருக்கிறது.. வடிவேலுவின் மறைக்கப்பட்ட அடையாளம், அவரின் நடவடிக்கைகள் ஆகியவை கதையின் முக்கியமான கிளைமாக்ஸ் புள்ளிகள்.
வடிவேலு தனது செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்த நடிப்பால் கவனம் ஈர்க்க, பகத் பாசில் தனது எளிதான, துறுதுறு நடிப்பால் கதையை இலகுவாக்குகிறார். கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, ரேணுகா போன்றோர் கதாபாத்திரங்களை சிறப்பாக நிறைவு செய்துள்ளனர்..
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் மர்மத் திருப்பங்களுக்கு உயிரோட்டம் அளிக்கிறது.. குறிப்பாக சில பழைய இளையராஜா பாடல்களை இயற்கையாக இணைத்த விதம் பாராட்டத்தக்கது.. ஒளிப்பதிவாளர் ஆழ்வார் காட்சிகளை நிஜத்திற்கு நெருக்கமாகவும் அழகாகவும் கையாண்டுள்ளார்; இயற்கையான நிறங்கள் கதையை உயிர்ப்புடன் காட்டுகின்றன..
மொத்தத்தில்,
‘மாரீசன்’ ஒரு சுவாரஸ்யமான கதை, தரமான இசை, சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றால் ரசிக்க வைக்கும் நல்ல படம்..