spot_img
HomeNews"காவல்துறை உங்கள் நண்பன்" படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்!

“காவல்துறை உங்கள் நண்பன்” படத்தை கைப்பற்றிய லிப்ரா புரடக்க்ஷன்ஸ்!

சினிமாவில் மிகச் சில படங்களே தான் பேசும் கருத்துகளாலும் , கதையாலும்,  கவனத்தை ஈர்த்து மக்கள் மனதில் இடம்பெறும். காவல் துறை உங்கள் நண்பன் படம் அப்படியான கவன ஈர்ப்பை கொண்ட ஒரு படைப்பாக உருவாகியுள்ளது. படைப்பாளர்  RDM இப்படத்தினை உருவாக்கியுள்ளார். பெண்கள் இன்றைய  சமூகத்தில்  எதிர்கொள்ளும் பிரச்சனையை மையமாக கொண்டது தான் இப்படத்தின் கரு. ஒரு காவல் அதிகாரிக்கும் உணவு கொண்டு சேர்க்கும் டெலிவரி பாய்க்கும் இடையில் உருவாகும் நிகழ்வுகளை பின்னணி களமாக கொண்டு படத்தின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. படத்திற்கு UA சான்றிதழ் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ரிலீஸிற்கு முன்பே கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக படத்தினை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

லிப்ரா புரடக்க்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் கூறியது…
மிகச் சமீப காலங்களில் குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் சிறு முதலீட்டில் எடுக்கப்படும், அழுத்தமான கதைகள் கொண்ட, நல்ல படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று, வசூலைக் குவித்து வருகின்றன. மேலும் விமர்சகர்களிடமும் நல்ல பாராட்டை பெற்று வருகின்றன.
இம்மாதிரி படங்களே என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும்  லாபகரமானதாகவும் நல்ல பெயரையும் பெற்றுத்தருகின்றன.
“காவல் துறை உங்கள் நண்பன்” படம் மிக அழுத்தமான கதையையும், அதே நேரம் மக்களை ஈர்க்க கூடிய வகையில் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இப்படத்தினை பார்த்த உடனே இதை எந்த வகையிலும் விட்டுவிடக் கூடாது என முடிவு செய்து விட்டேன். இப்படத்தினை   எளிமையும் தத்ரூபமும் கூடியதாகவும், அதே நேரத்தில் அனைத்து மக்களையும் கவரும் வகையிலும் படைத்திருக்கிறார் இயக்குநர் RDM.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் சுரேஷ் ரவி நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை – ஆதித்யா, சூர்யா
ஒளிப்பதிவு – விஷ்ணு ஸ்ரீ
படத்தொகுப்பு – வடிவேல், விமல் ராஜ்
கலை – ராஜேஷ்
தயாரிப்பு – BR Talkies Corporation in association with       White Moon Talkies

விநியோகம் – Libra Productions.

படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு பற்றிய விவரங்களை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img