யோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்ஷன் டார்க் படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும் உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.
இயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது…
சுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது என்றார்.
இப்படம் பற்றி நடிகை சுனைனா கூறியது…
இப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செயத்து போலவே இருந்தது. அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இப்படத்தில் என் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாப்பத்திரங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.
அறிமுக நாயகனுடன் நடிப்பது பற்றி அவர் கூறியது…
அனுபவம் வாய்ந்த நடிகர் புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.
தயாரிப்பாளர் A விஸ்வநாதன் Sai Films Studios சார்பில் தயாரிக்கும் இப்படம் செப்டம்பர் 11 பூஜையுடன் துவங்கியது.
இப்பூஜையில் தயாரிப்பாளர் A விஸ்வநாதன், நாயகன் நடிகர், தயாரிப்பாளர் பிரவீன், லக்ஷ்மி பிரியா, அதுல்யா , கருணாகரன், இயக்குநர் சாம் ஆண்டன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சக்தி, இயக்குநர் தாஸ் ராமசாமி, இயக்குநர் சத்யமூர்த்தி, விஸ்வாசம் மற்றும் இரும்புத்திரை வசனகர்த்தா சவரிமுத்து, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவாளர் உதயசங்கர், எடிட்டர் தீபக், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, உடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், நடன அமைப்பாளர் சக்தி ராஜு, இசையமைப்பாளர் சித்து குமார், இணை தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் தேனி தமிழ் உட்பட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் இருந்து தலக்கோணம் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. தளக்கோணத்தின் தொடர்ச்சியாக 38 நாட்களும் மற்றும் கொடைக்கானலில் 2 நாட்கள் என
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.
இப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இந்த இருவருக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.
Production Company :Sai Film Studios
Starring : Praveen,Yogi Babu,Karunakaran,Sunaina
Directed By : Dennis Manjunath
Music Director : Siddhu Kumar
Cinematography :Udhaya Shankar
Editor : Deepak
Stunt master : Danger Mani
Executive Producer : Kannan
Production Executive : Theni Thamizh