பெற்றோரின் துணையில்லாமல் மலேசியாவில் குடியேறும் இளம் தம்பதி அபி – அக்ஷரா
அக்ஷரா, அவர்களது குழந்தையை சுமந்துகொண்டிருக்கிறார்முதல் காட்சியிலேயே அடிப்பட்டு இரண்டு பேரால் துரத்தப்பட்டு வருகின்றார் விக்ரம்
அவரை ஒரு பைக் மோத, அந்த இடத்திலேயே மயக்கமடைகின்றார், அங்கிருந்து வாசு பணிபுரியும்மருத்துவ மனைக்கு கொண்டு செல்கின்றனர் போலிஸார்.
மருத்துவமனையில் வைத்து அவரை கொலை செய்ய முயற்சி நடக்கும்போது . அந்த கொலை முயற்சியில் அவரை காப்பாற்றும் வாசு, மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்.
வேலை முடித்து வீட்டிற்கு வர, அபியை அடித்துவிட்டு அக்ஷராவை ஒருவர் கடத்த, பிறகு விக்ரமை அந்த மருத்துவமனை விட்டு வெளியே கொண்டு வரவேண்டும், என மிரட்டப்படுகின்றார்.
விக்ரம் யார், ஏன் கொல்ல முயற்சிக்கிறார்கள்,
அதன் பின் நடக்கும் அதிரடி திருப்பங்களே இந்த கடாரம் கொண்டான்.
அனைவரையும் கவர்ந்தது விக்ரமின் ஸ்டைலான தோற்றம்தான். சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடி, ஸ்டைலான தாடி, செம்ம ஃபிட்டான உடல், விக்ரம் என்ன கதாபாத்திரம் கொடுங்க நான் ரெடிப்பா என்று மிரட்டிவிடுகின்றார், அப்படித்தான் இந்த கேகே கதாபாத்திரமும், ஏதோ ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கின்றார்,
விக்ரம் யார், அவரது பின்னணி என்ன அவர் தீவிரவாதியா ஏஜென்ட் போலீஸ்காரரா என்பது மட்டும் புரியவே இல்லை
முக்கியமான பாத்திரத்தில் அறிமுகமாகியிருக்கும் அபி ஹாசன், நடிகர் நாசரின் மகன். விக்ரமை விட ஸ்கிரீனில் நிறைய வருவது அபிஹாசன் தான், ஆனால், அவரும் முதல் படம் என்பது போலவே தெரியாமல் தன் மனைவியை தேடும் கணவனாக முகத்தில் பதட்டமும், வலியையும் நன்கு கொண்டு வந்துள்ளார்
சில இடங்களில் உணர்வு கம்மியாக இருப்பதுபோலத் தோன்றினாலும் ஒரு நல்ல அறிமுகமாகப் பதிகிறார்.
அக்ஷரா ஹாசன் இளம் தாயாக மனதை கவர்கிறார்., க்ளைமேக்ஸில், அந்த போலிஸிடம் மோதும் காட்சி, நம்மை பதட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றது,
மலேசியாவில் சைனா மார்க்கெட் என்பது உண்டு அங்கு எப்போதும் கூட்டம் அலைமோதி கொண்டே இருக்கும் அதே போல் தான் மலேசியாவின் காவல்துறை அலுவலகத்தை காட்டியுள்ளார் இயக்குனர்
, படத்தின் ஒளிப்பதிவு சூப்பர், ஆக்ஷன் காட்சிகள் தரமாக உருவாக்கப்பட்டுள்ளன
கடாரம் கொண்டான் எதிர்பார்ப்பின் ஏமாற்றம்