spot_img
HomeNewsஅவனே ஸ்ரீமன்நாராயணா’ - ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்*

அவனே ஸ்ரீமன்நாராயணா’ – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்*

புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிகார்ஜுனையா தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் ஷெட்டி, ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிப்பில் ஐந்து மொழிகளில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா – ஒரு ஃபாண்டஸி அட்வென்சர் காமெடி திரைப்படம்*

‘அவனே ஸ்ரீமன்நாராயணா முற்றிலும் ஒரு கற்பனையான கதை. அமராவதி எனும் ஒரு பழமையான வெகுதூரத்து கிராமத்தில், புதையல் ஒன்றுடன் தொடர்புடைய இன்றளவும் தீர்க்கமுடியாத ஒரு மர்மத்தைத் தீர்க்கும் முயற்சியே இத்திரைப்படம். இப்படத்தை தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் புஷ்கர் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. 

புஷ்கர் பிலிம்ஸ்புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா தயாரித்த முதல் படம் ‘கோதி பன்னா சாதாரண மைகட்டு’. அதனைத் தொடர்ந்து, கன்னட திரையுலகில் சிறந்த திரைப்படங்களை தயாரிக்கும் ஒரு வல்லமைமிக்க சக்தியாகவும், புதிய சிந்தனைகளையும் தொழிட்நுட்ப யுக்திகளையும் கொண்டு அனைத்து வகை திரைப்படங்களையும் மொழி வேறுபாடுகளையும் கடந்து வெற்றிப் பெற செய்வதில் முனைப்புடன் செயல்படுபவராகவும் திகழ்கிறார். 

அவரது முதல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் தயாரித்த கிரீக் பார்ட்டி, ஹம்பிள் பாலிடீசியன் நோக்கராஜ், கதையொந்து ஷுருவாகிதே, ஜீர்ஜிம்பே ஆகிய அனைத்தும் மகத்தான வெற்றிப்படங்கள். குறிப்பாக கிரீக் பார்ட்டி கன்னட திரையுலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த சில குறிப்பிட படங்களில் ஒன்று என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. 

இப்படத்திற்கு கதை எழுதியிருப்பவர்கள் மிகச்சிறந்த செயல்திறம் படைத்தவர்களான ‘தி செவன் ஆட்ஸ்’ (The Seven Odds) எனும் குழு. இக்குழு ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லியப்பா, அபிஜித் மகேஷ், சச்சின் (இயக்குனர்), அனிருத்தா கோட்கி, அபிலாஷ் மற்றும் நாகார்ஜுன் (பாடலாசிரியர்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டது. ஏழு பேரைக் கொண்ட இந்த குழு, பல அருமையான கதைகளை எழுதி, பிரமிக்கத்தக்க திரைப்படமாக உருவாக்கி, அதை வெற்றிப்படங்களாக உயர்த்துவதில் சாதனைப் படைத்து வருகிறது.    

இப்படத்தின் கதாநாயகன் ரக்ஷித் ஷெட்டி ஒரு நகைச்சுவை காவலராக நடிக்க, அவருடன் இணைந்து ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்கிறார். இப்படத்தில் அவர் ஒரு கொடூரமான வழிப்பறித் திருட்டு கூட்டத்தையும், ஒரு தந்திரமான அரசியல்வாதியையும் சமாளித்து எப்படி அந்த மர்மத்தை தீர்த்து வைக்கிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையுடன், ரசிக்கத்தக்க வகையில் பிரம்மாண்டமாக  படமாக்கியிருக்கிறார்கள். ரக்ஷித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஷான்வி நுட்பமாக காதலை வெளிப்படுத்தும் நாயகியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். 

முக்கிய வேடங்களில் பாலாஜி மனோகர், பிரமோத் ஷெட்டி, மதுசூதன் ராவ், அச்யுத் குமார், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே ஆகியோருடன் இணைந்து ரக்ஷித், சான்வி ஸ்ரீவஸ்தவா சிறப்பாக நடித்துள்ளனர். 

கரம் சாவ்லா ஒளிப்பதிவில், உல்லாஸ் ஹைதூர் கலை வண்ணத்தில் பிரமிப்பூட்டும், பிரம்ம்மண்டமான செட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அமராவதி நகரை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இப்படத்தின் ஆடை வடிவமைப்பு பொறுப்பாளரான அருந்ததி அஞ்சனப்பா, 1980-களில் நிலவி வந்த பேஷன் குறித்த தனது விரிவான ஆராய்ச்சிகளின் விளைவாக அவரது உழைப்பு வெகுவான பாராட்டுதலை பெற்றிருப்பதோடு, படத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறது.   

அஜநீஷ் லோக்நாத் பின்னணி மற்றும் இரண்டு பாடல்களுக்கு இசை அமைக்க, இப்படத்தின் வேறு இரண்டு பாடல்களுக்கு சரண்ராஜ் இசையமைத்திருக்கிறார். ‘ரங்கஸ்தலம் படத்திற்காக தேசிய விருது பெற்ற எம் ஆர் ராஜாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார். 

இயக்குனர் சச்சின் இப்படத்தின் இயக்கம், படத்தொகுப்பு, மற்றும் விஎப்எக்ஸ் சிறப்பு காட்சி அமைப்புகள் என மூன்று பொறுப்புகளிலும் திறம்பட செயலாற்றி இருக்கிறார். 

புஷ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘அவனே ஸ்ரீமன்நாராயணா, சச்சின் இயக்கத்தில், ரக்ஷித் மற்றும் சான்வி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், ஐந்து மொழிகளில் உலகெங்கும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.     

 

நடிகர்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்கள்:

ரக்ஷித் ஷெட்டி

ஷான்வி ஸ்ரீவஸ்தவா

பாலாஜி மனோகர்

பிரமோத் ஷெட்டி

மதுசூதன் ராவ்

அச்யுத் குமார்

கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே

மற்றும் பலர்

தயாரிப்பு: புஷ்கர் பிலிம்ஸ் புஷ்கரா மல்லிக்கார்ஜுனையா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img