‘உன் காதல் இருந்தால்’ என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை பாத்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும். சாதாரணமாக பார்க்கும் போது இந்த விஷயங்களை கவனிக்க முடியாது.
படத்தின் கதை கரு மூன்று நிறத்தில் முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கும். இந்த கதையை இழுக்க வித்தயாசமாக .. புது விதமாக திரையில் படம்பிடித்துள்ளார்கள். இப்படம் உளவியல் திரில்லர். பார்வையாளர்களுக்கும் படத்திற்கும் உளவியல் இருக்கும். திரில்லர் படத்தில் இருக்கும். அதேபோல், ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். படத்தின் நேரம் 2 மணி நேரம் தான். படம் பார்க்கும் மக்கள் படத்துடன் அவர்களைத் தொடர்புபடுத்திப் பார்க்கும் படியாக.. இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் என்று தோன்றும் வண்ணம் இருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு.
இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள். ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள்.#உன்காதல்இருந்
தொழிநுட்பம் :-
தயாரிப்பு & கதை, இயக்கம் – ஹாசிம் மரிக்கார்
ஒளிப்பதிவு – சாஜித் மேனன்
படத்தொகுப்பு – சாய் சுரேஷ்
இசை – மன்சூர் அஹமத்
கலை – ஆர்கன் எஸ். கர்மா
உடைகள் – அரவிந்த்
பாடகர்கள் – ஆண்டனி தாசன், கார்த்திக், மானஸி
அலங்காரம் – பிரதீப் ரங்கன்
பின்னணி இசை – ஸ்ரீகாந்த் தேவா
பாடல்கள் – பிரபாகரன் அமுதன், கண்மணி
சண்டை பயிற்சி – ரன் ரவி
புகைப்படம் – வித்யாசாகர்
தயாரிப்பு மேற்பார்வை – சுனில் பேட்டா
மக்கள் தொடர்பு – ஜான்சன்
தயாரிப்பு நிறுவனம் – மரிக்கார் ஆர்ட்ஸ்
விஎஃப்எக்ஸ் (VFX) – டிஜிட்டல் கார்வி.
இம்மாதம் வெளியிட திட்டமிள்ளார்கள்.