spot_img
HomeNewsகண்காணிப்பு வாடகை விமானங்கள் முதல் பல்வேறு நிவாரண பொருட்களை 'கில்டு' வழங்கியுள்ளது - 'ஜாகுவார்' தங்கம்

கண்காணிப்பு வாடகை விமானங்கள் முதல் பல்வேறு நிவாரண பொருட்களை ‘கில்டு’ வழங்கியுள்ளது – ‘ஜாகுவார்’ தங்கம்

ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க ஆளில்லா கண்காணிப்பு வாடகை விமானங்கள் முதல் பல்வேறு நிவாரண பொருட்களை ‘கில்டு’ வழங்கியுள்ளது – ‘ஜாகுவார்’ தங்கம்
தற்போது உலகம் முழுவதும் கொரானா வைரஸ் ஆட்டிப்படைக்கும் நேரத்தில், நம் நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு போட்டு அனைவரையும் வீட்டுகுள்ளே முடக்கி விட்டனர்… இந்த 144 தடை உத்தரவு நமது நலனுக்காக, அரசு நம் மீது மிகுந்த அக்கரை கொண்டு எடுத்து வரும் நடவடிக்கை என்பதால் நாம் இதனை எப்போதும் தலைவணங்கி ஏற்றுக் கொண்டு அனைவரும் ஏப்ரல் 14 வரை வீட்டுக்குள்ளேயே இருந்து நாட்டுக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டு, நமது நாட்டுக்காக தங்கள் உயிரை பணையம் வைத்து அயராது உழைத்துக்கொண்டு இருக்கும் காவலர்கள், ஊடகத்துறையினர், பத்திரிக்கையாளர் (நிருபர்கள்), தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு என் கரம் கூப்பி தலைவணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் மேற்கூறிய அனைவரும் எந்த வித நோய் நொடி இன்றி பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.. இப்படி தன்னலம் கருதாமல் உழைத்துக் கொண்டிருக்கும் காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கையுறைகள், முக கவசங்கள், உடலை மூடிக்கொள்ளும் முழு உறைகள், கிருமி நாசினிகள் போன்றவற்றை வழங்கி என்னாலான சிறு உதவியை எங்கள் சங்கமான “தென் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் (கில்டு) மூலம் செய்தேன். மேலும் ஊரடங்கு உத்தரவை கண்காணிக்க காவலர்கள் கேட்டு கொண்டதற்கிணங்க ஆளில்லா சிறிய கண்காணிப்பு விமானங்களை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தேன்..  மேலும் எங்கள் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (கில்டு) உறுப்பினர்களுக்கு  “10கிலோ அரிசி, பத்து நாட்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள்” ஆகியவற்றை (04-04-2020) சனிக்கிழமை அன்று முதல் கொடுத்து வருகிறேன்..  மளிகை பொருட்கள், அரிசி, சாமான்கள், காய்கறிகள் விலையேற்றம்,  மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும் நானே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு மிகுந்த சிரமங்களுக்கு இடையே சென்று வாங்கி வந்தேன்… அதுமட்டுமல்லாமல் FEFSI நிறுவனத்திற்கும் 150அரிசி மூட்டை வழங்கி உள்ளோம். மேலும்  நம் நாடும் மக்களும் வளமாகவும், நலமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிக்கு
*Dr.ஜாகுவார் தங்கம்*.
தலைவர் மற்றும் நிர்வாகிகள் தென்னிந்திய திரைப்படம்
மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம்..

Must Read

spot_img