spot_img
HomeNewsஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் விண்வெளி மற்றும் விமானவியல் பாடங்கள் கற்பிக்கும் நடிகர்

ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் விண்வெளி மற்றும் விமானவியல் பாடங்கள் கற்பிக்கும் நடிகர்

,

ஜெகதீஸ் , இவர் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல மூலம் சினிமாவில் அறிமுகமான மேடை நாடக
கலைஞர் ஆவார், திரைக்கு வர காத்திருக்கும் ஜானகி விஸ்வனாதன் இயக்கதில் “திரை கடல்” படத்திலும் நடித்திருந்தார்
பின் அனிருத் வெளியிட்ட “காதல் நீயே” ஆல்பத்தில் நடித்தும், பாடல் எழுதியும்,  திரு.ராஜிவ் மேனன் அவர்களிடம் உதவி இயக்குனராகவும் திரைத்துரையில் வளர்ந்து வருகிறார்.

இவர் ஒரு விமானவியல் முதுநிலை பட்டதாரியும் ஆவார், இவர் தற்போது ஐஐடி கீழ் இயங்க்கும் “இங்குபேசன் செல்” உதவியுடன்
வாயு-சாஸ்த்திரா என்ற நிறுவனத்தின் மூலம் நாடகக் கலை மூலம் விமானவியல் கற்ப்பித்து வருகிறார். இது முழு நேர
நாடக கலைஞர்களுக்கு ஒரு பகுதி நேர வேலை வாய்ப்பாக 15 க்கும் மேற்ப்பட்ட நாடக கலைஞர்களுக்கு உதவும் நிறுவனமாகவும் வளர்ந்து வருகிறது.
இந்த ஊரடங்கு சமயத்தில், ஐஐடி இங்குபேசன் செல் – வழிகாட்டுதலின் மூலம் ,300க்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள்
கற்ப்பித்து கொண்டிருக்கிறார் ஜெகதீஸ் மற்றும் அவர் வாயுசாஸ்த்திரா நாடகுழுவினர்.

Must Read

spot_img