spot_img
HomeNewsமாயன் இருந்தால் துன்பங்கள் மாயம்

மாயன் இருந்தால் துன்பங்கள் மாயம்

  1. மாயன் இருந்தால் துன்பங்கள் மாயம்

நடிகர் வசந்த் ரவி மற்றும் பிரனவ் பத்மசந்திரன் இணைந்து உருவாக்கியுள்ள மனநல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும்  “மாயன்” என்ற ஒற்றை மொபைல் செயலி  இது !!(மாயன், Mayan – Innate Healers App “ ! )
இந்த செயலியில்
பலவிதமான மனநல பிரச்சனைகளுக்கு வீடியோ அழைப்பு மூலம் ஆலோசனைகள் தீர்வுகள் வழங்கும் இந்த ‘“மாயன், Mayan – Innate Healers App என்ற “ செயலியை நடிகர் வசந்த் ரவி மற்றும் பிரனவ் பத்மசந்திரன் ஆகிய இருவரும் இணைந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

பொதுவாக ஆன்லைனில் ஆலோசனைகள், தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் என வரும்போது உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஆயிரக்கணக்கில் தளங்கள் குவிந்து கிடக்கிறது!!ஆனால் மனநலன் என்று வரும்போது மிக மிக சொற்பமான தளங்களே, இணையத்தில் கிடைக்கப்பெறும் நிலை, இன்றளவும் நிலவி வருகிறது  என்பது உண்மையே !!!       இதனை முற்றிலும் போக்கும் வகையில் தான்  ‘“மாயன், Mayan – Innate Healers App “ வடிவமைக்கப்பட்டது.  இந்த செயலியை துவங்கியுள்ள நடிகர் வசந்த் ரவி இது பற்றி பேசும் போது, இந்த தளமானது விரிவான வகையில், அனைத்து விதமான மனநலன் சார்ந்த பிரச்சனைகளுக்கும், பல விதமான தீர்வுகளை, தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் மட்டுமே வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இதன் பயனாளர்கள் குறிப்பிட்ட எல்லை வரையிலான உடல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இத்தளம் மூலம் தீர்வுகளையும் பல தெளிவான முடிவுகளையும் பெறமுடியும் அதே சமயம் இதில் தனிநபர் உடல்நலன் சார்ந்த விஷயங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் என்பதே எங்களின் குறிக்கோள் என்கிறார் இவர்!!

இது குறித்து மேலும் வசந்த ரவி கூறும்பொழுது… இன்றைய கால கட்டத்தில் உலக அளவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மன அளவில் மட்டுமல்ல பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்துக் கொண்டு அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்காகவேஇது உருவாக்கப்பட்டது
எங்களது செயலி மனநலன்,  உடல் நலன் பிரச்சனைகளுக்கு அனைத்துவிதமான மாற்று தீர்வுகளை  ஒருங்கே கொண்டுள்ளது. சைக்காலஜி கவுன்சிலிங், யோகா தெரபி, ப்ரானிக் ஹீலிங், ரெய்க்கி, திபெத்தியன் ஹீலிங், பிசியோதெரபி   ஆக்குபேஷனல் தெரபி, (Psychology counseling, Yoga therapy, Pranic healing, Reiki, Tibetan healing, Physiotherapy, Occupational therapy) என அனைத்தையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்துள்ளது.
இதன் பயனாளர்கள் தங்களுக்கு தேவையான தெரபிஸ்ட்டை, தங்களுக்கு தேவைப்படும் தெரபி வகையின் அடிப்படையிலும், பாலினம், மொழி மற்றும்  ரேட்டிங் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கும் வசதிகள் இதில்  உள்ளது. இந்த செயலியின் பெரிதும் போற்றதகுந்த அம்சம் யாதெனில் இதில் தெரபிஸ்ட் குணப்படுத்துபவர்களாகவும் நோயாளிகள் பயனாளர்களாகவும்  ஒருவருக்கு ஒருவர்   அறியப்படுவர்.

இது தான் மிக சரியான முறை அவர்களை அப்படி அடையாளப்படுத்துவதே  மிக சிறந்தது என்பதை நானறிவேன், அதுதான் ‘“மாயன் செயலியின் தனி சிறப்பு (Mayan – Innate Healers App “ ) இதன் மூலம் இது நடைமுறைக்கு வந்துள்ளது என்பது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது என உச்ச மகிழ்ச்சியை  பகிரும் இவர்  நடிகர் மட்டுமல்ல மக்கள் நலன் காக்கும் மருத்துவரும் கூட!!!  இவர் நடித்த அடுத்த படத்துக்கு மக்கள் மத்தியில் பெரிதும்       எதிர்பார்ப்பினை எகிறசெய்துள்ள  “ராக்கி” படத்தின் வெளியீட்டுக்கு துள்ளலுடன் காத்திருக்கும் வசந்த் ரவி மேலும் கூறும்பொழுது..
மக்கள் தங்களுக்கு தேவையான மிகத் திறமை வாய்ந்த தெரபிஸ்ட்டை, நேருக்கு நேரான வீடியோ  அழைப்பு மூலம் தங்கள் வீட்டிலிருந்தபடியே இந்த செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம். பயனாளர்கள் எப்பொழுதும் தங்கள் தெரபிஸ்டை தேடி நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியதிருக்கும் அல்லது தங்கள் பகுதியில் உள்ளவருடன் மட்டுமே சிகிச்சை பெற வேண்டியிருக்கும். ஆனால் இந்த செயலி அந்த வழக்கத்தினை உடைத்துள்ளது மாயன் செயலி மூலம் நீங்கள் உலகில் எந்த மூலையில் இருந்தும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் இருக்கும் மருத்துவர்களையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம், பயனாளர்கள் தற்போது மற்ற பயனாளர்களின்  கருத்துக்கள் மற்றும் ரேட்டிங் அடிப்படையில் தங்களுக்கு தேவையான தெரபிஸ்ட்கலையும், சிகிச்சைகளையும்  அவர்களுக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ள முடியும் என்பது கூடுதல் சிறப்பு என்கிறார்.

‘“மாயன், Mayan – Innate Healers App “  தளத்தில் சிக்ச்சை தர இணைந்திருக்கும் நிபுணர்கள்
டிப்ரசன், ஆன்சைட்டி, காதல், உறவு பிரச்சனைகள், பாதுகாப்பு அச்சம் தொடர்பான பிரச்சனைகள், தூக்கம் வராத இன்சாமினியா பிரச்சனை, தேர்வு பற்றிய மன அழுத்தம், நிதி  பற்றிய  பற்றிய மன அழுத்தம், பணியிட பிரச்சனை, இழப்பு பற்றிய துக்கத்திலிருந்து விடுபட முடியாத பிரச்சனை, ஓரின சேர்க்கை மன அழுத்தம், திருமண உறவில்  பிரச்சனை,  டயாபடீஸ், பிளட் பிரசர் ( ஹைபர் டென்சன்/ஹைபோ டென்சன் ) முதுகுவலி பிரச்சனை என
( Depression,  Anxiety, Love and Relationship issues, Increase Productivity, Improve Mindfulness, Insomnia (Sleeplessness), Exam stress, Financial stress, Workplace Stress, Loneliness, Grief, or loss of loved one, Headache/Sinus/Migraine, LGBTQ support, Marital problems, Diabetes, Blood Pressure (Hyper Tension/Hypo Tension),  Joint Pains, Back Pain)  அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மிகச் சரியான உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை கவனமுடன் தரவுள்ளார்கள், மேலும் இன்றைய சூழ்நிலையில் இந்த செயலி மக்களுக்கு மிகவும் தேவையான ஒன்று இதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்று அவர் கூறினார்

குறிப்பு: இந்த செயலி முதலில் ஆண்ட்ராய்ட் (Android) இயங்கு தளத்திலுல் பிற்பாடு  ஐஓஎஸ்  (IOS) இயங்கு தளத்திலும் வெளியாகவுள்ளது

Must Read

spot_img