spot_img
HomeNews'சிரித்தால் மட்டும் போதுமா'

‘சிரித்தால் மட்டும் போதுமா’

‘சிரித்தால் மட்டும் போதுமா’

பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:50 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘சிரித்தால் மட்டும் போதுமா’.. சிரிக்க வைப்பது எவ்வளவு கடினமான பணியோ அதேபோல அந்த சிரிப்போடு சேர்த்து சிந்திக்க வைப்பது இன்னும் கடினம். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவைச்செல்வர் புலவர் இ.ரெ.சண்முக வடிவேல் தனது அனுபவமிக்க பேச்சால் இந்த இரண்டு பணிகளையும் எளிதாக கையாள்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை நகைச்சுவையுடன் தனது பாணியில் விவரிக்கிறார்.  ஒவ்வொரு நிகழ்வுகளையும் இவர் விவரிக்கும் அழகில், நேர்த்தியில், கேட்பவர்கள் அவற்றையெல்லாம் தங்கள் மனதில் நீண்டநாட்கள்  நினைத்து மகிழும்படி செய்து விடுகிறார். பெரியவர் முதல் சிறியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்க மட்டுமல்லாது சிந்திக்கவும் வைக்கும் இந்நிகழ்ச்சி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

 

Must Read

spot_img