இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்து வரவிருக்கும் திரைப்படமான ‘அன்பறிவு’ திரைப்படம், ஜனவரி 7, 2022 முதல் Disney Plus Hotstar தளத்தில் வெளியாவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் அஸ்வின் ராம் கூறியதாவது…
என்னைப் போன்ற ஒரு அறிமுக இயக்குநருக்கு, திரைத்துறையின் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனம், எனது திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கியது எனக்கு மிகப்பெரிய பெருமையை அளித்துள்ளது. சத்ய ஜோதி பிலிம்ஸ் பல்வேறு மீடியாவில், குறிப்பாக திரைப்படத் துறையில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. கண்ணியமான உள்ளடக்கத்துடன் கூடிய கதைகளில், குடும்ப பார்வையாளர்களை மகிழ்விப்பது அவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அவர்களுக்காக நான் ஒரு படத்தை இயக்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்பறிவு ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், இதில் நல்ல பொழுதுபோக்கு, உணர்வுபூர்வ தருணங்கள், ரசிக்கத்தக்க இசை, மற்றும் நகைச்சுவை உணர்வுகள் என எல்லாம் கலந்து இருக்கும்.
தமிழ் சினிமாவில் பல அறிமுக திரைப்பட இயக்குனர்கள், வழக்கத்திற்கு மாறான, அழுத்தமான இருன்மை மிக்க திரில்லர் கதைக்கருக்களுடனான படங்களிலேயே, பயணத்தைத் தொடங்க முயற்சிக்கும்போது, இயக்குநர் அஸ்வின் ராம் ஒரு குடும்ப திரைப்படத்தை வழங்கியுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டதற்கு அவர் கூறிய பதில்.
“அது உண்மை தான். புது இயக்குனர்கள் வித்தியாசமான கரு கொண்ட கதைகளை உருவாக்குவதைப் பார்ப்பது உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது, ஆனால் நான் எப்போதும் குடும்ப பார்வையாளர்களை மகிழ்விக்கவே விரும்பினேன். பார்வையாளர்கள் உட்காரவைத்து, அவர்களை ரசிக்க வைக்கும், குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை உருவாக்கி, அவர்கள் அதை கொண்டாடுவதை பார்ப்பது போல் பெரிய மகிழ்ச்சி எதுவும் இல்லை. இது வெறுமனே பெருமை கொள்ளும் அறிக்கை அல்ல, வணிக ரீதியாகவும் எங்கள் படம் சிறந்த படமாக உருவாகியுள்ளது. அன்பறிவு திரைப்படத்தினை Disney Plus Hotstar வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது மற்றும் இந்த திரைப்படம் ஒவ்வொரு வீட்டின் திரையிலும் வெளியாக உள்ளதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது.
ஹிப் ஹாப் ஆதி இந்த கதையை நம்பி இந்த படத்திற்கு தனது முழு ஆற்றலையும் கொடுத்ததற்கு நன்றி. நெப்போலியன் சார், சாய் குமார் சார், விதார்த் சார் என தமிழின் முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியது என்னைப் போன்ற ஒரு இயக்குனருக்குக் கிடைத்த வரம். ஒட்டுமொத்த படக்குழுவும் ஒரு குடும்பத்துடன் பணிபுரிந்த அனுபவத்தை எனக்கு அளித்தனர். அன்பறிவு நிச்சயமாக ரசிகர்களுக்கு, ஒரு மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும்.
‘அன்பறிவு’ திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் T.G. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தை G சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ள இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி முதன்மை வேடத்தில் நடிக்க, ஷிவானி ராஜசேகர் மற்றும் காஷ்மீரா நாயகிகளாக நடித்துள்ளனர். நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த் ஆகியோருடன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.