spot_img
HomeNewsதி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

இரு மொழிகளில் உருவாகும், நடிகர்  ராம் பொதினேனி நடிக்கும்,  “தி வாரியர்” திரைப்படம் வரும் ஜூலை 14, பிரமாண்டமாக வெளியாகிறது !

நடிகர் ராம் பொதினேனி நடிப்பில், பிரபல இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், உருவாகி வரும் “தி வாரியர்” திரைப்படம்,  வரும் ஜூலை 14 உலகமெங்கும் திரையரங்குகளில்  பிரமாண்டமாக வெளியாகிறது.

கோலிவுட் மற்றும் டோலிவுட் இரண்டு திரைத்துறைகளிலும் பிரபலமான நடிகர் ஆதி பினிசெட்டி, “தி வாரியர்” படத்தில் வில்லனாக நடிக்கிறார், தென்னிந்திய திரையுலகின்  இளம் நடிகைகளில் ஒருவரான கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்பதற்காக தயாரிப்பாளர்கள் ஒரு அற்புதமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் ராம் பொதினேனி ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையில், வெடிபொருட்கள் அடங்கிய பெட்டியின் மீது, கையில் காயத்துடன், அமர்ந்திருக்கிறார். கோபமான முகத்துடன் துப்பாக்கியை வைத்து கொண்டிருக்கிறார், அதே நேரத்தில் குண்டர்கள் கூட்டம் அவரை கண்டு  ஓடுவதைக் காணலாம்.

முன்னதாக RAPO19 என அழைக்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு சமீபத்தில்  அசத்தலான ஸ்டைலில் வெளியிடப்பட்டது. ராம் பொதினேனி போலீஸ் அதிகாரியாக துப்பாக்கி ஏந்தியபடி கடுமையான தோற்றத்துடன், அவரைச் சூழ்ந்திருக்கும் போலீஸ் அதிகாரிகளுடன் இடம்பெற்றுள்ள போஸ்டருடன், படத்தின் தலைப்பு “தி வாரியர்” என வெளியிடப்பட்டது.

மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு, படத்தின் நாயகி கீர்த்தி  ஷெட்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிப்ரவரி 14 அன்று வெளியிடப்பட்டது. அதில் அவர் விசில் மகாலட்சுமியாக நவநாகரீக தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். சமீபத்தில், மகா சிவராத்திரி தினத்தில், ஆதியின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.

படக்குழுவினர் ‘இந்த படம் எதிர்பார்ப்புகளை விஞ்சி, தென்னிந்திய சினிமாவின் மறக்கமுடியாத போலீஸ் கதைகளில் ஒன்றாக இருக்கும்’ என்று கூறியுள்ளனர். ராம் பொதினேனியின் இஸ்மார்ட் ஷங்கரின் வெற்றிக்குப் பிறகு ‘தி வாரியர்’ வருவது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் அக்‌ஷரா கவுடா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Srinivasaa Silver Screen நிறுவனம் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி மிக பிரமாண்ட  பட்ஜெட்டில் தயாராகும் “தி வாரியர்” படம், கோபிசந்த், தமன்னா நடிப்பில், இந்த நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சீடிமார்’ திரைப்படத்தின்  அட்டகாச வெற்றிக்கு பிறகு, இந்நிறுவனத்திற்கு மற்றுமொரு மகுடமாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ள இந்த அதிரடி திரைப்படத்தை பவன் குமார் வழங்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுஜித் வாசுதேவ் செய்கிறார். தற்போது ‘தி வாரியர்’ படத்தின் முக்கியமான பகுதிகள் பரபரப்பாக தயாராகி வருகின்றன

Must Read

spot_img