வாய்தா இதை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் கோர்ட்டில் அதிகமாக வாய்தா வாங்கியவர்கள் யார் யார் என்று ஒரு பட்டிமன்றமே வைக்கலாம் அந்த அளவுக்கு புகழ் பெற்றது இந்த வாய்தா இந்த வாய்தா பெயரில் வந்திருக்கும் படத்தைப் பற்றி இதோ விமர்சனத்தை பார்க்கலாம் சலவைத் தொழிலாளர் சமூகத்தை சேர்ந்த முதியவர் ஒருவரின் விபத்தில் தொடர்புடைய ஆதிக்க சக்திகள் நடத்தும் நயவஞ்சக விளையாட்டே ‘வாய்தா’ திரைப்படம்.
சலவைத் தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கும் ராமசாமி அவர்களுக்கு எதிர்பாராத விதமாக உயர்ஜாதி இளைஞனின் பைக் மோதி விபத்துக்குள்ளாகி றார் அதன்பின் இரு ஊரில் இருக்கும் உயர்ஜாதி ஆட்களிடம் இந்த விபத்து பஞ்சாயத்தாக மாற நீதிமன்றத்துககு செல்கிறது ராமசாமி குடும்பம்
இதன் பின் நடக்கும் சம்பவங்களின் திரைக்கதையே வாய்தா ராமசாமிக்கு அந்தப் பாத்திரம் கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறது எதார்த்தமான நடிப்பில் நம் மனதை கொள்ளை கொள்கிறார் நாயகியாக நடித்திருக்கும் பவுலின் ஜெசிகா அவருக்கு இது முதல் படம் என்று தெரியாத வண்ணம் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சிறப்பு தோற்றத்தில் நாசர் எப்போதும் போல் தன் நடிப்பை செதுக்கி இருக்கிறார் இன்னும் சில கதாபாத்திரங்கள் தங்களின் பாத்திரமறந்து அறிந்து சிறப்பாக செய்திருக்கின்றனர்
சாதி தீயையும் தீண்டாமையின் கொடுமையையும் மேல்சாதியினர் ஆணவப் போக்கையும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள், கீழ் சாதி மக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வழக்கறிஞர்கள் எப்படி நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுகிறார்கள், நீதித்துறை எப்படி பலவீனமாகவும் இருக்கிறது என்பதை எவ்வித அச்சமுமின்றி அழகான திரைக்கதையை உருவாக்கி இயக்கியிருக்கிறார் மகி வர்மன்
வாய்தா வாய்தா என்று வாங்காமல் மக்கள் படம் பார்த்தால் வாய்தா வெற்றியின் வழி