நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில்,
Shanthi Talkies சாரபில் அருண் விஸ்வா தயாரித்து வழங்க,
இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை சென்னையில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. மண்டேலா திரைப்பட புகழ் மடோனா அஸ்வின் எழுதி இயக்கும் இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமான ‘பிரின்ஸ்’ படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா Shanthi Talkies சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். திரைப்பட துவக்க விழாவில் இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டார்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு இயக்குனர் – விது அயன்னா
இசையமைப்பாளர் – பரத் சங்கர்
எடிட்டர் – பிலோமின் ராஜ்
கலை இயக்குனர் – குமார் கங்கப்பன்
ஸ்டண்ட் இயக்குனர் – யானிக் பென்
ஒலி வடிவமைப்பு – சுரேன் G, எஸ் அழகியகூத்தன்
ஒலிக்கலவை – சுரேன் G
ஆடை வடிவமைப்பாளர் – தினேஷ் மனோகரன்
ஒப்பனை கலைஞர் – சையத் மாலிக் S
உடைகள் – நாகு