spot_img
HomeNewsதமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.சோனி லிவ்

தமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.சோனி லிவ்

சோனி லிவ் தனது  உன்னத தமிழ் படைப்பான தமிழ் ராக்கர்ஸ் மூலம் நேயர்களை பைரசி உலகிற்கு அழைத்து செல்கிறது.

உலகளவில் சட்டவிரோதமான செய்தி திருட்டு என்பது கலை உலகில் மிக பெரிய கவலைக்குரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. இத்தகையப் பெரும் செய்தி திருட்டு செய்யும்  இணையதள கும்பல் மீது ஒரு முடிவில்லா போர் ஒன்றே கலை உலகத்தினர் நடத்தி வருகின்றனர். முதல் முறையாக இந்த தலைப்பில் ஒரு மிக பெரிய ஆராய்ச்சி நடத்தி, இந்த வலையில் இருக்கும் ஆழ்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளை நேயர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக இந்த தொடர் இருக்கும். எப்போதும் தங்களுடைய உன்னதமான மற்றும் உருக்கமான கதைகளுக்கு பெயர் போன சோனி லிவ் நிறுவனம், தங்களது அடுத்த தமிழ் அசலாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் தொடர் மூலம் செய்தி திருட்டு எனும் தலைப்பில் ஒரு வித்தியாசமான கதை தளத்தின் மூலம் அனைவரையும் ஈர்க்கும் ஒரு திரைக்கதை அமைத்துள்ளனர். ஈரம், வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 போன்ற வெற்றி பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில், தமிழ் ராக்கர்ஸ் ஆகஸ்ட் 19 முதல் சோனி லிவ் இல் ஒளிப்பரப்பாக உள்ளதும்

நிஜ வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்ட  இந்த தொடர், நேயர்களை ருத்ரா எனும் ஒரு காவல் அதிகாரியின்  பயனம் மூலமாக விவரிக்கிறது. இந்த கதாபாத்திரத்தில் புகழ் பெற்ற நடிகர் அருண் விஜய் நடிக்கின்றார். ருத்ரா என்பவன் காலம் கடந்து, அடங்க மறுக்கும் ரசிகர்கள் மற்றும் மிகவும் ஆபத்தான ஆற்றல் மிக்க இணைய தள திருடர்கள் மீது போர் தொடுப்பவனாக காட்டப்படுகின்றான். ஒரு மிக பெரிய தயாரிப்பில் உருவாகும் ஒரு திரைப்படத்தை மக்கள் பெரிதாக எதிர்பார்க்கும் ஒரு படத்தை எவ்வாறு காப்பாற்றுகிறான் என்பதே கதைத்தளம் – கருடா
இத்திரைப்படத்தினை நாட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் பிரபலமாக உள்ள AVM தயாரிப்பு நிறுவனம் தனது OTT உலகின் நுழைவு வாயிலாக இந்த தொடரினை தயாரிக்கிறது. மனோஜ் குமார் கலைவானன் மற்றும் ராஜேஷ் மஞ்சுநாதின் எழுத்தில் உருவான இந்த தொடர், அருண் விஜய், அழகம் பெருமாள், எம் எஸ் பாஸ்கர், ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன், வினோதினி வைத்தியநாதன் மற்றும் தருண் குமார் ஆகியோரை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எடுக்க பட்டுள்ளது.

பதிவான கருத்துக்கள்

அருணா குகன், தயாரிப்பாளர், AVM நிறுவனம்

தமிழ் ராக்கர்ஸ் ஒரு நல்ல ஆழமான கதை களத்தை கொண்டது. நாங்கள் மிக தீவிரமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். இதன் மூலம், கலை துறையினர் படும் இன்னல்கலை பல்வேறு கோணங்களில் இருந்து ஆழமாக காட்டிஉள்ளனர். சோனி லிவ் நிறுவனத்தினை தனது ஒளிப்பரப்பு பங்குதாரராக கொண்டது எங்களுக்கு பலத்தினை மேலும் கூட்டியிள்ளது. தொலைநோக்கு சிந்தை உள்ள இயக்குனர் அறிவழகன் மற்றும் நடிகர் அருண் விஜய் எங்களுடன் இணைந்தது மேலும் ஒரு கூடுதல் பலத்தினை தந்ததுடன் மட்டும் இல்லாமல், மக்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான ஒரு பந்தத்தினை ஏற்படுத்தும் எனும் நம்பிக்கையினை ஏற்படுத்தி உள்ளது.

அறிவழகன், இயக்குனர்

பைரசி, ஹால் காபி, டோரன்ட் டவுன்லோட் போன்ற வார்த்தைகள் என்ன தான் கேள்வி பட்டதாக இருந்தாலும், அதனால் கலை உலகில் ஏற்படும் வலிகள் மற்றும் வேதனைகள் உலகிற்கு தெரியாது. தமிழ் ராக்கர்ஸ் ஒரு சுவாரஸ்மான திரில்லர் மூலம் அருண் விஜய் தனது ருத்ரா எனும் கதா பாத்திரம் மூலம் மக்களை பைரசி உலகத்தின் சவால்களுக்கு அழைத்து செல்கிறது.

அருண் விஜய், நடிகர்
இந்த தொடரின் பகுதியாக இருப்பது ஒரு மிக பெரிய அனுபவமாக இருந்தது. சமுதாயத்திற்கு தேவைப்படும்  தொடராக இதனை பார்க்கிறேன். செய்தி திருட்டு என்பது காலம் காலமாக கலை உலகில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதும். இந்த தொடர் திரை உலகில் பைரசி எந்த அளவுக்கு ஊடுருவி உள்ளது என்பதை வெளிக்காட்டும். மற்றும் எனது கதாபாத்திரமான ருத்ரா என்பவன் எப்படி இதனை முடிவிற்கு கொண்டு வருகின்றான் என்பதே கதை. எனவே நான் மிகவும் ஆவலுடன் இந்த தொடரை சோனி லிவ் இல் காண்பதற்கு காத்திருக்கின்றேன். திறை துறையில்  அனுபவம் வாய்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Must Read

spot_img