அமலாபால் தன் சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து ஓட்டிட்டியில் வெளிவந்திருக்கும் படம் கடாவர்
கடாவர் என்றால் என்ன பிரேத பரிசோதனை செய்யப்படும் உடல் மற்றும் அதற்காக தானம் செய்யப்படும் உடல் இதற்கு பெயரே கடாவர்
கதை புரிந்திருக்கும் என்று நினைக்கிறோம் மலையாள இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் கடாவர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஹரிஸ் உத்தமன், முனீஷ்காந்த், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகரர், ஜெய ராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரபல மருத்துவரான சலீம் ரஹ்மானை ஒரு மர்ம மனிதன் காரோடு வைத்து எரித்து கொலை செய்து விடுகிறான். இந்த கொலைக்கும் சிறையில் இருக்கும் வெற்றி க்கும் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. ஆனால், சிறையில் இருக்கும் வெற்றியால் எப்படி கொலை செய்ய முடியும்? வெற்றிக்கு வெளியில் இருந்து உதவும் அந்த மர்ம கொலைகாரன் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது தான் படத்தின்
கதை
வித்தியாசமான தோற்றம் வித்தியாசமான நடிப்பு என அசத்தியுள்ளார் அமலாபால்..
அதுல்யா ரவி. சின்ன வேடம் என்றாலும் அதற்காக மெனக்கெட்டுள்ளார்.
அதுபோலவே ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ரித்விகா, என எல்லோருமே தங்கள் நடிப்பில் கச்சிதம். வினோத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அறிமுக இயக்குநர் அனூப் படத்தில் எந்த இடத்திலும் தோய்வு இல்லாமல் அடுத்தடுத்து ட்விஸ்ட் வைத்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார்