spot_img
HomeNewsவிஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிழற்குடைகள் வழங்கப்பட்டது

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நிழற்குடைகள் வழங்கப்பட்டது

தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சாலையோர நடைபாதை கடைகளுக்கு 50 நிழற்குடைகள் வழங்கப்பட்டது
October 12, 2022

சென்னையில் உள்ள சாலையோர கடை வியாபாரிகள் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் தாங்கள் தொழில் செய்வதற்கு நிழற்குடை வேண்டி அந்தந்த பகுதியில் உள்ள தளபதி மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை அணுகினார்கள். தளபதி அவர்களின் உத்தரவின் படி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று முதல் கட்டமாக 50 நிழற்குடைகளை சென்னையில் உள்ள திருவான்மியூர், அம்பத்தூர், தாம்பரம், சாலிகிராமம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் சாலையோர நடைபாதை கடைகளுக்கு அகில இந்திய பொதுச் செயலாளர் திரு புஸ்ஸி N. ஆனந்து அவர்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர்கள் தாமு, அப்புனு, பாலமுருகன், சூரியநாராயணன், தொண்டரணி தலைவர் சரத் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Must Read

spot_img