spot_img
HomeNewsசிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் 'வாழ்' 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’ 

சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் ‘வாழ்’ 


சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் “கனா” மற்றும் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” என பாராட்டுக்களை குவித்த இரண்டு வெற்றி திரைப்படங்களை தயாரித்து ஒரு மிகச்சிறந்த பிராண்டாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களோடு, வெவ்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இந்த இரண்டு படங்களும், சமூக பிரதிபலிப்பை கொண்டிருந்தன, இது உலகளாவிய பார்வையாளர்களிடையே வெற்றிப்படமாக அமைய காரணமாக இருந்தது. தொடர்ச்சியாக விதிவிலக்கான திரைப்படங்களை தயாரிக்கும் லட்சிய உந்துதலுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனம், தற்போது அதன் மூன்றாவது முயற்சியான ‘வாழ்’ என்ற படத்தை முழுவீச்சில் தயாரித்து வருகிறது. இந்த படம், அருவி படத்தின் மூலம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாவதால் ஏற்கனவே மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருக்கிறது. இயற்கையாகவே, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், அதன் கதையை பற்றிய ஏராளமான யூகங்களை ஏற்படுத்தி, மிகப்பெரிய அளவில் படத்தை கொண்டு சேர்த்திருக்கிறது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ இசை வெளியீட்டு விழாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் இந்த படத்துக்கு ஒரு சரியான துவக்கம் கிடைத்ததை மொத்த குழுவும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறது. மேலும், குழுவினர், படத்தை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க, காலில் சக்கரங்களை கட்டிக் கொண்டு இடைவிடாமல் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஷெல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் பிரதீப் குமாரின் இசை கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும், ஏனெனில் பன்முகப்படுத்தப்பட்ட பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அவரிடம் எதிர்பார்க்கலாம். இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் குட்டி ரேவதி ஆகியோருடன் இணைந்து அவரும் பாடலை எழுதுகிறார். ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா (படத்தொகுப்பு), ஸ்ரீராமன் (கலை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), ஜெய்கர் பி.எச் (ஒலி வடிவமைப்பாளர்), தினேஷ் மனோகரன் (ஆடை வடிவமைப்பாளர்), அக்கு ஸ்டுடியோஸ் ஸ்ரீ ராமன் & குழு (அனிமேட்ரோனிக்ஸ்), எஸ் மாதேஸ்வரன் (கலரிஸ்ட்), பிரவீன் டி (சிஜிஐ), கபிலன் (போஸ்டர் டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெறுகிறது என்றால், அதற்கு காரணம் முதல் உதவி இயக்குநர்கள் பாக்கியராஜ் கோதை, யஸ்வந்த் இன்மொழி, இரண்டாம் உதவி இயக்குனர்கள் ராகுல் ராஜா, எம்.எஸ். கிருஷ்ணா, மிருதுளா ஸ்ரீதரன் மற்றும் பயிற்சி உதவி இயக்குநர்கள் – சந்தோஷ் நந்தீஸ்வரன், நிர்மலா ஆகியோரை உள்ளடக்கிய உதவி இயக்குனர்கள் குழு தான். இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. கலை அரசு இணை தயாரிப்பாளராகவும், ரா சிபி மாரப்பன் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணிபுரிகிறார்கள்.

அருண் பிரபு புருஷோத்தமன் எழுதி இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img