”யாதெனக்கேட்டேன்”

0
940

                                               ”யாதெனக்கேட்டேன்”
கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் ”யாதெனக் கேட்டேன்” என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கண்ணதாசனின் ”யாதெனக் கேட்டேன்” கவிதையை பிரதிபலிக்கும் இப்படத்தை ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர் மறைந்த நகைச்சுவை நடிகர் ஐ.எஸ்.ஆரின் மகன்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கண்ணதாசனின் 93வது பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் கங்கை அமரன், மலேசிய அமைச்சர் டத்தோ சரவணன், நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்ட பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.

ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான இந்தப் படத்தில் ஷனாயா, வைஷாலி, மாதவி உள்ளிட்ட மூன்று நாயகிகள் அறிமுகமாகிறார்கள். விஹான் இன்னொரு நாயகனாக அறிமுகமாகிறார். முக்கிய பாத்திரத்தில் நடிப்பு பயிற்சியாளர் சித்தன் கார்த்திஷ் மற்றும் சோலை நடிக்கிறார்கள்.

அனைவரும் பார்க்கக் கூடிய சஸ்பென்ஸ் கலந்த குடும்பப் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பொன் காசிராஜன், இசை விவேக்நாராயண். படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகுமென்று இப்படத்தின் இயக்குனர் ஐ.எஸ்.ஆர் செல்வகுமார் தெரிவித்துள்ளார் .