spot_img
HomeNews20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த்...

20 வருடங்களுக்குப் பிறகு டிஸ்னியின் தி லயன் கிங் படத்துக்கு பின்னணி குரல் கொடுக்கும் ‘அரவிந்த் சாமி’

 

2016 ஆம் ஆண்டில் ‘தி ஜங்கிள் புக்’ திரைப்படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் இதயங்களை வென்ற டிஸ்னி, தனது புகழ்பெற்ற திரைப்பட வரிசையும் மற்றும் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட ஒரு ரத்தினக்கல்லான ‘தி லயன் கிங்’ படத்தை அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ரசிகர்களுக்கு வழங்குகிறது. அனிமேஷனில் உருவாக்கப்பட்ட அதன் முந்தைய பதிப்பானது அதன் வலுவான மற்றும் உணர்ச்சி ரீதியான கதை சொல்லல் மற்றும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களுக்காக புகழ் பெற்றது. அது எல்லா இடங்களிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது. சிம்பாவின் தீங்கு விளைவிக்கும் மாமா கதாபாத்திரமான ஸ்கார், மிகவும் அச்சுறுத்தும் வில்லனாக காலம் கடந்தும் நம் நினைவுகளில் சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளது!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சிறந்த செய்தியாக டிஸ்னி இந்தியா, 90களின் கனவுக்கண்ணனும் மற்றும் தலைமுறைகள் தாண்டியும் தன் அபார நடிப்பிற்காக மதிக்கப்படும் அரவிந்த் சாமி, தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பில் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு பின்னணி குரல் கொடுக்கிறார் என்பதை அறிவித்துள்ளது. சுவாரஸ்யமாக, 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லயன் கிங் அனிமேஷன் படத்தின் தமிழ் பதிப்பில் முன்னணி கதாபாத்திரமான சிம்பாவுக்கு அரவிந்த் சாமி குரல் கொடுத்திருந்தார். உண்மையில் அவரது வாழ்க்கை முழுமையடைந்திருக்கிறது!

இது குறித்து அரவிந்த்சாமி கூறும்போது, “20 ஆண்டுகளுக்கு முன்பு தி லயன் கிங்கில் சிம்பாவுக்கு டப்பிங் செய்தபோது ஒரு அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது. தி லயன் கிங்கின் புதிய பதிப்பில் ஒரு கதாபாத்திரத்திற்காக டப்பிங் செய்ய இந்த முறை என்னை அணுகியபோது நான் ஸ்கார் கதாபாத்திரத்திற்கு டப்பிங் செய்ய விரும்பினேன். ஏனெனில் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான மற்றும் பல பரிமாணங்களை கொண்டது. இது தொழில்முறை அனுபவத்தை வளப்படுத்தியது” என்றார்.

‘அயர்ன் மேன்’ மற்றும் ‘தி ஜங்கிள் புக்’ புகழ் இயக்குனர் ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் உருவாகியுள்ள, டிஸ்னியின் ‘தி லயன் கிங்’ சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாகும். ஒரு ஹீரோ உருவாகும் பயணம் தான் இந்த மியூசிக்கல் ட்ராமா படத்தை பெரிய அளவில், முன்னோடியான, மிகச்சிறந்த ஃபோட்டோ ரியல் அனிமேஷன் தொழில்நுட்பத்துடன் மீண்டும் பெரிய திரையில் உயிர் பெற்று வர காரணமாக அமைந்திருக்கிறது.

டிஸ்னியின் “தி லயன் கிங்” வரும் ஜூலை 19, 2019 அன்று தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்படுகிறது.

ஜான் ஃபேவ்ரூ இயக்கியிருக்கும் ‘தி லயன் கிங்’ கதை வருங்கால மன்னர் பிறக்கும் ஆப்பிரிக்க சவன்னாவுக்கு பயணிக்கிறது. சிம்பா தனது தந்தை மன்னர் முஃபாசாவை வழிபட்டு, தனது சொந்த அரச விதியை மனதில் கொள்கிறார். ஆனால் ராஜ்யத்தில் உள்ள எல்லோருமே புதிய மன்னரின் வருகையை கொண்டாடுவதில்லை. முஃபாசாவின் சகோதரரரும், சிம்மாசனத்தின் முன்னாள் வாரிசுமான ஸ்கார் வேறு சில திட்டங்களைக் கொண்டுள்ளார். பிரைட் ராக் (Pride rock) போரானது துரோகம், சோகம் மற்றும் ட்ராமாவை கொண்டிருக்கிறது, இதன் விளைவாக சிம்பா நாடுகடத்தப்படுகிறது. புதிதாக வந்த நண்பர்களின் உதவியுடன், சிம்பா வளர்ந்து எவ்வாறு தனது உரிமையை கைப்பற்ற வேண்டும் என்பதை அறிந்து கொள்கிறது.

சிம்பாவாக டொனால்ட் குளோவர், நாலாவாக பியோனஸ் நோல்ஸ்-கார்ட்டர், முஃபாசாவாக ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ், ஸ்காராக சிவெட்டல் எஜியோஃபர், பம்பாவாக சேத் ரோஜென் மற்றும் டிமோனாக பில்லி ஐச்னர் ஆகியோரை உள்ளடக்கியிருக்கிறது நட்சத்திர குழு. பொக்கிஷமான கதாபாத்திரங்களை ஒரு புதிய வழியில், முன்னோடி திரைப்பட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உயிர்ப்பித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img